குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த துவையல். நினைவாற்றலையும், மூளையின் செயல்பாடுகளையும் புதுப்பிக்கும் எளிமையான சிறந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக பயன்களையும் நன்மைகளையும் கொண்டது வல்லாரை கீரை.


தேவையான பொருட்கள்
- 1 கட்டு வல்லாரை கீரை
- 1 வெங்காயம்
- 4 வரமிளகாய்
- கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- சிறிது கொடம்புளி
- ½ மூடி (துருவியது) தேங்காய்
- இந்துப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
- வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- வெங்காயம் சேர்த்து வதக்கி அத்துடன் வல்லாரை இலைகளையும் கொடம்புளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட வேண்டும்.
- துருவி வைத்துள்ள தேங்காயுடன் வதக்கியவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- குழந்தைகளுக்கு ஏற்றது.