உளுந்து பாயாசம் (உளுந்தங்கஞ்சி)

தமிழகத்தில் பாயசம் என்பது அரிசி, சேமியா மற்றும் பருப்பு வகைகளிலும் செய்யக்கூடிய ஒரு உணவு தான் என்றாலும் பெரும்பாலும் உளுந்தில் பாயசம் செய்வதில்லை. அதேப்போல் உளுந்தங்கஞ்சி என்றவுடன் அரிசி, உளுந்து என பல பொருட்களை சேர்த்து நாம் செய்வதுண்டு. ஆனால் இந்த உளுந்தங் கஞ்சி அல்லது உளுந்து பாயசம் அவற்றிலிருந்து சற்று வித்தியாசமானது. For English Urad dal porridge recipe.

உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கக் கூடியது. இதற்கு பிரதானமாக உளுந்தை தான் பயன்படுத்த போகிறோம். இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது சிறிது உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டாலே போதும் வாரத்திற்கு ஒரு முறையாவதும் இந்த கஞ்சி/உளுந்து பாயசத்தை நாம் செய்துவிடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து பருகுவதால் உடல் பலப்படும்.

தேவையான பொருட்கள்

  • ஒரு கப் உளுந்து
  • ஒரு கப் வெல்லம்
  • சிறிது தேங்காய் துருவல்
  • சிறிது சுக்கு தூள்
  • ஒரு ஏலக்காய்

செய்முறை

  • முதலில் உளுந்தை ஓரிரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
  • இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது சிறிது உளுந்தை அதிகமாக ஊறவைத்துக் கொண்டால் சுலமாக செய்துவிடலாம்.
  • உளுந்து நன்கு ஊறிய பின் ஊறவைத்த உளுந்தை ஆட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இட்லிக்கு உளுந்து ஆடும் பொழுது இரண்டு மூன்று கைப்பிடி அளவு மாவை எடுத்துக் கொண்டால் போதுமானது.

  • எடுத்துக் கொண்ட உளுந்து மாவுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து கரைத்த உளுந்தை ஊற்றி கிண்ட வேண்டும்.
  • நன்கு கொதிவந்த பின் அடுப்பை சிறுதீயில் வைத்து அடி பிடிக்காமல் வேகவிடவும்.

  • ஓரளவு வெந்தப்பின் வெல்லத் தூள், சுக்குத் தூள், ஏலக்காய் தட்டி போட்டு அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஓரிரு நிமிடம் கொதிக்க விட கஞ்சி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.
  • அடுப்பை அணைத்த பின் தேங்காய் துருவலை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அவ்வளவுதான் நல்ல ஒரு சுவையான உளுந்து கஞ்சி / உளுந்து பாயசம் தயார்.

குழந்தைகளுக்குப் பிடித்த உணவு. மாலை உணவிற்கு சிறந்தது. உடலுக்கு நல்ல பலத்தையும் வலுவையும் அளிக்கும். பெண்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த உணவுகள். எலும்புகளுக்கு பலத்தை அளிக்கக் கூடியது. பெண்களுக்கு வரக்கூடிய கருப்பை சார்ந்த தொந்தரவுகள், மூட்டுவலி, முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு மருந்து. உடலுக்கு நல்ல ஒரு குளிர்ச்சியைக் அளிக்கக் கூடியது. இந்த உளுந்து பாயாசத்தை அவ்வப்பொழுது தயாரித்து அனைவருமே பருக ஆரோக்கியம் மேம்படும்.

5 from 1 vote

உளுந்து பாயாசம் (உளுந்தங்கஞ்சி)

தமிழகத்தில் பாயசம் என்பது அரிசி, சேமியா மற்றும் பருப்பு வகைகளிலும் செய்யக்கூடிய ஒரு உணவு தான் என்றாலும் பெரும்பாலும் உளுந்தில் பாயசம் செய்வதில்லை.. அதேப்போல் உளுந்தங்கஞ்சி என்றவுடன் அரிசி, உளுந்து என பல பொருட்களை சேர்த்து நாம் செய்வதுண்டு. ஆனால் இந்த உளுந்தங் கஞ்சி அல்லது உளுந்து பாயசம் அவற்றிலிருந்து சற்று வித்தியாசமானது. உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கக் கூடியது. இதற்கு பிரதானமாக உளுந்தை தான் பயன்படுத்த போகிறோம். இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது சிறிது உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டாலே போதும் வாரத்திற்கு ஒரு முறையாவதும் இந்த கஞ்சி/உளுந்து பாயசத்தை நாம் செய்துவிடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து பருகுவதால் உடல் பலப்படும்.
Drinks
Indian
ulundhu-kanji-recipe
ஆயத்த நேரம் : – 1 hour
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 1 hour 15 minutes

தேவையான பொருட்கள்

  • ஒரு கப் உளுந்து
  • ஒரு கப் வெல்லம்
  • சிறிது தேங்காய் துருவல்
  • சிறிது சுக்கு தூள்
  • ஒரு ஏலக்காய்

செய்முறை

  • முதலில் உளுந்தை ஓரிரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
  • இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது சிறிது உளுந்தை அதிகமாக ஊறவைத்துக் கொண்டால் சுலமாக செய்துவிடலாம்.
  • உளுந்து நன்கு ஊறிய பின் ஊறவைத்த உளுந்தை ஆட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இட்லிக்கு உளுந்து ஆடும் பொழுது இரண்டு மூன்று கைப்பிடி அளவு மாவை எடுத்துக் கொண்டால் போதுமானது.
  • எடுத்துக் கொண்ட உளுந்து மாவுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து கரைத்த உளுந்தை ஊற்றி கிண்ட வேண்டும்.
  • நன்கு கொதிவந்த பின் அடுப்பை சிறுதீயில் வைத்து அடி பிடிக்காமல் வேகவிடவும்.
  • ஓரளவு வெந்தப்பின் வெல்லத் தூள், சுக்குத் தூள், ஏலக்காய் தட்டி போட்டு அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஓரிரு நிமிடம் கொதிக்க விட கஞ்சி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.
  • அடுப்பை அணைத்த பின் தேங்காய் துருவலை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அவ்வளவுதான் நல்ல ஒரு சுவையான உளுந்து கஞ்சி / உளுந்து பாயசம் தயார்.

குறிப்புகள்

குழந்தைகளுக்குப் பிடித்த உணவு. மாலை உணவிற்கு சிறந்தது. உடலுக்கு நல்ல பலத்தையும் வலுவையும் அளிக்கும். பெண்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த உணவுகள். எலும்புகளுக்கு பலத்தை அளிக்கக் கூடியது. பெண்களுக்கு வரக்கூடிய கருப்பை சார்ந்த தொந்தரவுகள், மூட்டுவலி, முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு மருந்து. உடலுக்கு நல்ல ஒரு குளிர்ச்சியைக் அளிக்கக் கூடியது. இந்த உளுந்து பாயாசத்தை அவ்வப்பொழுது தயாரித்து அனைவருமே பருக ஆரோக்கியம் மேம்படும்.

1 thought on “உளுந்து பாயாசம் (உளுந்தங்கஞ்சி)

Comments are closed.