உளுந்து சோறு / கருப்பு உளுந்து சாதம்

பெண்களின் இடுப்பு எலும்பினை பலப்படுத்தவும், குழந்தையின்மையை போக்கவும் உதவும் சிறந்த உணவு இந்த உளுந்தஞ்சோறு. மாதவிடாய் சார்ந்த பதிப்புகள், கருப்பை கட்டிகள் மற்ற கருப்பை கோளாறுகள் போக்கும் சிறந்த உணவு. மாதவிலக்கு நாட்களில் இந்த உளுந்து சாதம் உட்கொள்ள பலம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சிலி சம்பா அரிசி
  • ½ கப் உடைத்த கருப்பு உளுந்து
  • 15 பல் பூண்டு
  • சீரகம்
  • பெருங்காயம்
  • இஞ்சி
  • நல்லெண்ணெய்
  • உப்பு

செய்முறை

  • கிச்சிலி சம்பா அரிசியையும் தோலுடன் இருக்கும் உடைத்த உளுத்தம் பருப்பினையும் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி ஒரு பாத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  • பின் அதனுடன் நான்கு கப் தண்ணீருடன் பூண்டு சேர்த்து ஒரு மண்சட்டியில் குழைய வேகவிடவேண்டும்.

  • நன்கு வெந்தபின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி, சீரகம், பெருங்காயம் தாளித்து வெந்த அரிசியுடன் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
  • இதனுடன் மேலும் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறலாம். இதற்கு எள் துவையல் பொருத்தமானதாகும்.

5 from 2 votes

ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 25 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சிலி சம்பா அரிசி
  • ½ கப் உடைத்த கருப்பு உளுந்து
  • 15 பல் பூண்டு
  • சீரகம்
  • பெருங்காயம்
  • இஞ்சி
  • நல்லெண்ணெய்
  • உப்பு

செய்முறை

  • கிச்சிலி சம்பா அரிசியையும் தோலுடன் இருக்கும் உடைத்த உளுத்தம் பருப்பினையும் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி ஒரு பாத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  • பின் அதனுடன் நான்கு கப் தண்ணீருடன் பூண்டு சேர்த்து ஒரு மண்சட்டியில் குழைய வேகவிடவேண்டும்.
  • நன்கு வெந்தபின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி, சீரகம், பெருங்காயம் தாளித்து வெந்த அரிசியுடன் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
  • இதனுடன் மேலும் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறலாம். இதற்கு எள் துவையல் பொருத்தமானதாகும்.

1 thought on “உளுந்து சோறு / கருப்பு உளுந்து சாதம்

  1. Karpagam

    5 stars
    எங்கள் ஊரில் அதிகமாக செய்வோம்

Comments are closed.