மூலிகைகள் வரிசையில் பல மூலிகைகளையும் அவற்றின் தன்மை, பயன்கள், மருத்துவம் என பல வற்றைப் பற்றி தெரிந்துக் கொண்டோம். அவற்றின் சில கிழங்கு வகை மூலிகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை கிழங்குகள் வரிசையில் வந்தாலும் சிறந்த மூலிகைகளாக இருப்பதால் அவற்றைப் பற்றி ஓரிரு வரிகளில் தெரிந்துக்கொள்வோம். கருணைக் கிழங்கு, இஞ்சி, அமுக்கரா போன்றவை கிழங்குகள் தான் என்றாலும் இவை மூலிகைகளே.
கருணைக் கிழங்கு
அன்றாடம் உணவில் சேர்க்கக்கூடிய ஒரு சிறந்த கிழங்கு இந்த கருணைக் கிழங்கு. பல இடங்களில் பிடி கருணை என்றும் இதனை அழைப்பதுண்டு. மூல நோய்க்கு மிக சிறந்த மூலிகை கிழங்கு இது.
அமுக்கிரா
உடலை உரமாக்கும் அற்புதமான ஆற்றல் கொண்ட கிழங்கு இது. தூக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. வாதமகற்றியாகவும் சிறுநீரப் பெருக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இந்த அமுக்கிரா கிழங்கு மூலிகை உள்ளது.
இஞ்சி
பல உணவுகளில் அன்றாடம் நாம் சேர்க்கும் மற்றொரு கிழங்கு மூலிகை இஞ்சி. நரம்பு தொந்தரவு, தலைவலி, தும்மல், இருமல், வயிற்றுக்கோளாறுகளுக்கு சிறந்த மூலிகை.
சாதாவகைக் கிழங்கு
உணர்ச்சியைத் தூண்டும் தன்மைக் கொண்ட இந்த சாதாவகைக் கிழங்கு உடலைத் தேற்றி, சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்டது.
காசினிக் கிழங்கு
பித்தத்திற்கு மிக சிறந்த மூலிகை காசினிக் கிழங்கு. குளிர்ச்சியை ஏற்படுத்தி சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்ட அற்புத மூலிகை கிழங்கு.
கூர்க்கன் கிழங்கு
மருந்துக் கூர்க்கன் கிழங்கு கண் நோய்களுக்கும், இரத்த அழுத்தத்திற்கும் நல்ல மருந்து. நோய் எதிர்பாற்றலையும் அதிகரிக்கும்.