காயங்களை ஆற்றும் வெட்டுகாய பச்சிலை

Tridax procumbens; வெட்டுகாயப்பச்சிலை, கிணற்றுபாசான், மூக்குத்திப்பூ, தாத்தாபூ செடி, முறியன்பச்சிலை.

இது புண்ணாற்றி, குருதியடக்கி மற்றும் கபநிவாரணி ஆகும்.
மூச்சுகுழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்களை குணப்படுத்தும்.
மேலும் இதன் இலைகள் வைரஸ், பூஞ்சை, ஒட்டுண்ணி நோய் தொற்றிற்கு எதிராகவும், வீக்கமுறிக்கியாகவும் செயல்படுகிறது.

  • இதன் இலைக்கஷாயம் கல்லீரல் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
  • இதன் இலைத்தூள் இரண்டு பங்கும் கொண்டக்கடலை ஒரு பங்கும் கலந்து நீரிழிவு நோய்க்கு கொடுக்கப்படுகிறது.
  • இதன் பூக்களை 5,6 பறித்து வாயிலிட்டு மென்று சாப்பிட்டால் பல்வலி, பல்சொத்தை சரியாகும்.
  • இலையை அரைத்து பற்று போட்டால் ஆறாத சர்க்கரை இரணம் ஆறும்.
(8 votes)