உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்க மரங்கள் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒவ்வொரு நாளும் மரங்களுடன் நாம் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்க அதுவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மருந்தாகவும் இருக்கிறது. மரங்கள் பிராண சக்தியை அதிகளவில் அளிக்கின்றன.
- மரங்களுடன் அதிகமாக தொடர்பு கொள்வதால் மாத்திரைகளுக்கு விடை கொடுக்க முடியும்.
- அழகான பூக்களும் செடிகளும் நம் ஆரோக்கியத்தை காக்கும் உயர்த்த பொருட்கள். மல்லிகைப்பூ, சங்குப்பூ, வேப்பம்பூ, செம்பருத்திப் பூ, ரோஜாப் பூ என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
- பசுமையான நிறங்கள் மனதிற்கு இதத்தை கொடுக்கும். சிகப்பு, மஞ்சள் நிறப்பூக்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வெள்ளை மற்றும் ஊதா பூக்கள் மனதிற்கு அமைதியை கொடுக்கும்.
- மனிதர்களை நேரடியாக காப்பவை பூக்கள். உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் மனதிற்கும் தெம்பையும் உண்டாக்கி பல வியாதிகளை பூக்கள் குணமாக்க்குகின்றனர்.
- வீட்டுத் தோட்டம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. உளவியல் கோளாறுகளை குணமாக்கும். வாழ்வியல் பிடிப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியது.
- தூக்கமின்மைக்கு திருநீற்றுப்பச்சிலை உதவுகிறது.
- மனம், உடல் சார்ந்த நோய்களுக்கு மரங்கள் மருந்தாகிறது.
- நுரையீரல் சார்ந்த வியாதிகளுக்கு அரச மரம், பைன் மரங்கள் உதவுகிறது.
- குழந்தையின்மைக்கு அரச மர காற்றே மருந்தாகிறது.
- தோல் நோய்களுக்கு வேப்ப மரங்கள் மருந்தாகிறது.
- தலைவலி போக ஏதோ ஒரு மரத்தின் மீது தலை வைத்துப் படுத்தாலே போதும் தலைவலி போய்விடும்.
- நோயாளிகள் எப்பொழுதுமே மரங்களிடையே வாழ்வது அவசியம். இதனால் உடலில் பல முக்கிய இரசாயனங்கள், திரவங்கள் உற்பத்தியாகிறது. இதனால் வியாதிகள் விரைவில் குணமாகும்.
- காசநோய்க்கு வேப்ப மரங்கள்சிறந்த மருந்தாகிறது. வேப்ப மரத்தின் காற்று காசநோயிலிருந்து பாதுகாக்கிறது.
- புளிய மரத்தின் காற்று உடலுக்கு பல வியாதிகளைக் கொண்டு வரும் என்பது அனைவரும் அறிந்ததே.
- பச்சை மரங்கள், அழகிய பூக்கள், இலைகளைக் கொண்ட மரங்கள், செடிகள், கொடிகளை நட்டு நம் உடல் நலத்தை பேணி பாதுகாப்போம். அடுத்த சமூகத்திற்கு இதைவிட பெரிய பரிசினை நம்மால் அளிக்க முடியாது.