தை திருநாள் பொங்கலுக்கு உகந்த பாரம்பரிய அரிசிகள் கம்பஞ் சம்பா, சீரக சம்பா, கிச்சடி சம்பா, தூயமல்லி, கவுனி அரிசி போன்றவை… அதேப்போல் இனிக்கும் பொங்கலுக்கு ஏற்ற சிறுதானியங்கள் தினை, குதிரைவாலி, சாமை, வரகு போன்றவை.. இவற்றில் சில பாரம்பரிய பொங்கல் உணவு தொகுப்பு. வீட்டில் தை திருநாளன்று பொங்கல் வைக்க இவ்வாறு ஏதாவது ஒரு பாரம்பரிய அரிசி அல்லது சிறு தானியங்களை பயன்படுத்தி பொங்கல் வைத்து கதிரவன், பசு மற்றும் இயற்கைப் படைத்து மகிழ்வோம். பாரம்பரிய பொங்கல் நமக்கும் நமது குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தையும், நலனையும் அளிக்கும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. வாழ்வில் எல்லா நலனும் பெருகும்.
சில பாரம்பரிய பொங்கல்
கிச்சடி சம்பா அரிசி சர்க்கரைப் பொங்கல்
பாரம்பரிய அரிசி சர்க்கரைப் பொங்கல்
புது அரிசி ஆத்தூர் கிச்சடி சம்பா பாரம்பரிய அரிசி சர்க்கரைப் பொங்கலுக்கு சிறந்து அரிசி.குறைவில்லாத சத்துக்களும், நிறைவான சுவையையும் அளிக்கும் சிறந்த அரிசி நம் பாரம்பரிய அரிசி ஆத்தூர் கிச்சடி. இதனில் பொங்கல் வைக்க மணமும் சுவையும் அபாரமாக இருக்கும்.
செய்முறை ➤செட்டிநாட்டு இனிப்பு கவுனி அரிசி
செட்டிநாட்டு இனிப்பு கவுனி அரிசி
தனிச்சிறப்பு இந்த அரிசியில் என்ன வென்றால் இதில் இருக்கும் 'அந்தோசியனின்'. இதனைக் கொண்ட இந்த அரிசி, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக் கட்டிகளை அகற்றுவதுடன், சிறுநீரகம், கல்லீரல், இதயத்தை பாதுகாக்கக் கூடியது. முக்கியமாக கேன்சரை அண்டவே விடாது.
செய்முறை ➤மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல்
மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல்
எளிதாக ஜீரணிக்ககூடிய சிறந்த உணவு அவல். பக்குவமாக தயாரிக்கப்பட்ட சிகப்பரிசி மாப்பிள்ளை சம்பா அவலினைக் கொண்டு ஏதேனும் ஒரு உணவை அவ்வப்பொழுது தயாரித்து உண்ண உடல் பலம் கூடும், சத்து குறைபாடு அகலும்.
செய்முறை ➤தினை சர்க்கரைப் பொங்கல்
தினை சர்க்கரைப் பொங்கல்
சுவையான சத்தான தினை சர்க்கரைப் பொங்கல். இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இந்த தானியம் தினை உடலை வலுவாக்கும். வாயு நோயையும், கபத்தையும் போக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.
செய்முறை ➤வரகு இனிப்பு பொங்கல்
வரகு இனிப்பு பொங்கல்
வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது.
செய்முறை ➤குதிரைவாலி வெண்பொங்கல்
குதிரைவாலி வெண்பொங்கல்
சிறுதானியங்களில் மிகவும் மிருதுவான மற்றும் சிறிய தானியமாக இருப்பது நம் குதிரைவாலி. மானாவரியில் விளையும் இந்த தானியம் உணவு பாதுகாப்பு மட்டுமல்லாது உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது. நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம்.
செய்முறை ➤சாமை வெண் பொங்கல்
சாமை வெண் பொங்கல்
சர்க்கரை நோயளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.
செய்முறை ➤குதிரைவாலி இனிப்பு பொங்கல்
குதிரைவாலி இனிப்பு பொங்கல்
நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து கொண்ட நம் பாரம்பரிய தானியம். சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இதுவே. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.