banana leaf benefits, valai illai payanpagal, maruthuvagunangal, six taste, arusuvai, traditional knowledge

தமிழர் உணவு – அதன் சிறப்பு

பிரபஞ்சத்தில் உயிர் வாழ அடிப்படை தேவையானவற்றில் மிக முக்கியமானது உணவு. உடலை இயக்கம் உயிர் சக்தி உணவிலிருந்தே உருவாக்கப்படுகிறது. உண்ணும் உணவு சீராகவும் முறையாகவும் இருக்க உடலின் செயல்பாடு, வளர்ச்சி, இயக்கம், எண்ணம், மனநிலை போன்றவை சீராக இருக்கும். உயிர் சக்தி உள்ள நல் உணவை தொடர்ந்து பெற உடல் அபரிவிதமான ஆற்றலையும் ஆழமான அமைதியையும் பெரும். உயிர் சக்தி உள்ள உணவே உடலுக்கு மருந்தாகவும் செயலாற்றும். 

உணவே மருந்து.. மருந்தே உணவு…

உணவே மருந்து.. மருந்தே உணவு… பல ஆண்டு காலமாக தமிழகத்தில் உணவு என்பது ஒரு வகை மருத்துவமாகவே கருதப்படுகிறது. முன்னர் அருந்திய உணவு சீராக ஜீரணித்து பின் பசித்து உணவு அருந்த, தனியாக மருத்துவமும் மருந்தும் தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். 

விஞ்ஞானம் கோடிகளை செலவு செய்து கண்டுபிடிக்க நினைக்கும் பல உடல் ரகசியங்களை நம் முன்னோர்கள் எளிதாக அக ஞானத்தில் அறிந்து, சிலவற்றை எடுத்துக் கூறியும் பலவற்றை எளிதாக செயல்முறைப்படுத்தும் விதமாகவும் நமக்கு program செய்து கொடுத்து சென்று விட்டனர்.  

அப்படி program செய்து கொடுத்த பலவற்றில் சிலவற்றை இன்று விஞ்ஞானம் சான்றுடன் விளக்கியுள்ளது. அவ்வாறு விளக்கியதில் மிக முக்கியமானது தமிழர்களில் உணவில் அன்றாடம் சேர்க்கும் மருத்துவ மூலிகைப் பொருட்களின் ரகசிய செயல்பாடுகளும், தமிழர்களில் உணவில் உள்ள  உடலின் கார அமில தன்மை சமநிலையும்.

சமச்சீர் உணவு, ஊட்டச்சத்து உணவு, வாழை இலை உணவு என்று நமது உணவில் பட்டையை கிளப்பும் அளவிற்கு மருத்துவம், அறிவியல் மற்றும் ஆரோக்கியத்தை புகுத்தியுள்ளனர். 

banana leaf benefits, valai illai payanpagal, maruthuvagunangal, six taste, arusuvai, traditional knowledge

நம் முன்னோர் வகுத்து கற்றுக்கொடுத்த அன்றாட சமையல் முறைகளை கூர்ந்து கவனித்தாலே புலப்படும் எப்பேர்ப்பட்ட அறிவியலை எளிதான முறையில் நடைமுறைப் படுத்தி உள்ளனர் என்று. தாளிக்க பயன்படும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், மிளகு, கிராம்பு, இலவங்கம், பட்டை, சோம்பு தொடங்கி மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் தொடர கருவேப்பிலை, புதினா, மல்லி என மருத்துவப் பொருட்களையும் மூலிகைகளையும் உடலின் கார அமில தன்மைக்கேற்ப பிரிக்க முடியாத அளவு எளிதாக உட்புகுத்தி உள்ளனர்.

இரசாயனம் மற்றும் எதிர் விளைவுள்ள ஆங்கில மருத்துவம் கொடுத்த மருந்து மாத்திரையை விட எளிதாக நோய் தடுப்பாற்றலையும், சக்தியையும் கொடுக்க வல்லது நம் பாரம்பரிய சமையல் முறை.

உதாரணத்திற்கு சின்ன வெங்காயம், HDL என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பை இரத்தத்தில் சீராக அதிகரித்து இருதய சம்பந்தம் தொந்தரவுகள் மற்றும் உடல் பருமனில் இருந்து நம்மை காக்கிறது. இதயம் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை உருவாக்கும் இரத்த உறைதலை ஆங்கில மருந்தான ஆஸ்பிரினை விட எந்த பக்க விளைவும், ரசாயனமும் இல்லாத நம்  வெள்ளைபூண்டு சீராக்கும்.  

இது மட்டுமா இன்றைய அறிவியல் கூறும் Ph எனப்படும் கார அமில உணவின் தத்துவத்தையும் நம் எளிய தமிழர் உணவில் அழகாக புகுத்தி உள்ளனர். முதலில் உணவை (பசித்து பூசி) பசிக்கும் போது உண்ண வேண்டும். பின் உணவு உண்ணும் இடத்தையும் நேரத்தையும் சரியாக தேர்வு செய்ய அதனுடன் உணவு உண்ணும் மனநிலை, உணர்வு மிகவும் முக்கியமானது.

banana leaf benefits, valai illai payanpagal, maruthuvagunangal, six taste, arusuvai, traditional knowledge

உணவு ஒன்று செரிமானம் வேறு

ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒரே மாதிரியான உணவை உட்கொண்டாலும் அவர்களின் மன நிலைக்கேற்ப ஜீரண உறுப்பும் ஜீரண சுரப்பிகளும் சுரக்கும். ஒருவர் கவலையாக இருந்தால் சீராக ஜீரண சுரப்பிகள் சுரப்பு நீரை சுரக்காது அந்த நேரத்தில் உணவு அருந்துவது கூடாது.   

நம் உணவு முறைகளில் உள்ள உணவுகளை அறிவியல் காரத்தன்மை உள்ள உணவுகள் அமிலத்தன்மை கொண்ட உணவுகள் என்று பிரிகிறது.

காரத் தன்மை அமிலத் தன்மை

காரத்தன்மை கொண்ட உணவுகள் உடலுக்கு நன்மை தரும் என்றும் அதிகமான அமிலத் தன்மை கொண்ட உணவுகள் உடல் நலத்தை கெடுக்கும் என்றும் கூறுகிறது.

PH வும்

நம் தமிழர் உணவுகளோ இந்த கார அமில தன்மையை சமமாக கொண்டு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியதாக உள்ளது. நமது பாரம்பரிய உணவு முறையில் உணவை உட்கொள்ளும் போது காரத்தன்மை என்று சொல்லக்கூடிய Ph 7 என்ற நிலையை நமது உடல் எளிதில் பெற முடியும். 

நம் தமிழர்களின் உணவு முறையும் பரிமாறும் முறையையும் சற்று கூர்ந்து கவனித்தால் எளிதில் நம் முன்னோரின் இரகசிய தத்துவம் புலப்படும்.  அன்று வாழையடி வாழையாக வந்த பழக்கங்கள் இந்த நவீன காலத்தில் மறந்து போக நோயும், மன உளைச்சலும் பெருகிவிட்டது. இன்றோ நமது உணவை எவ்வாறு பரிமாறுவது உண்பது என்று கூட கற்றுக்கொடுக்க வேண்டிய அறியாமை நிலையில் நாம் உள்ளோம். வாழை இலையில் எவ்வாறு உணவை பரிமாற வேண்டும், அதற்கான காரணங்களை வாழை இலை பதிவில் பார்க்கலாம்.

கார அமில தன்மையின் சமன்பாட்டை எவ்வாறு நமது உணவில் புகுத்தி உள்ளனர் என்றும் இனி பார்ப்போம். புழுங்கல் அரிசி உணவு காரத்தன்மை கொண்டது, குழம்பு வகைகள் அமிலத்தன்மை கொண்டது, அதில் பயன்படுத்திய மருத்துவ குணம் கொண்ட தாளிப்பு பொருட்கள் கடுகு, வெங்காயம், கருவேப்பிலை காரத்தன்மை கொண்டது. கூட்டு, அவியல், தயிர் அமிலமும், பொரியல், அப்பளம், ரசமோ காரத்தன்மை கொண்டது.

ஆரோக்கிய நுட்பங்கள்

ஆகா நல்ல மனநிலையுடன் இந்த சரிவிகித சமச்சீர் உணவை உட்கொள்ள லூயி கேர்வரான் நிருபித்த ‘உயிர்களின் செயல்பாட்டில் ஒன்று மற்றொன்றாக மாறுகிறது’ சாத்தியப்பட்டு, உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் இரும்பு, சுண்ணாம்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மட்டுமல்லாது அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் என அனைத்தையும் இந்த முறை உணவில் பெற்றும் வளமாக வாழலாம்.

இப்படி பல பல ஆரோக்கிய நுட்பங்களை சர்வசாதரணமாக அன்றாட வாழ்வில் புதைத்து வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். கண்களை மூடிக்கொண்டு இவற்றை பின்பற்றினாலே போதும் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை அன்றாடம் நாம் வாழ முடியும்.

(113 votes)