Welcome to HealthnOrganicsTamil !!!

ஊட்டச்சத்தும் உணர்வும் கலந்த தீபாவளி

வாண்டு சிண்டு என நம் வீட்டு பட்டாம்பூச்சிகளின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பண்டிகைக் காலம், நம் வீட்டுப் பட்டாம்பூச்சிகளுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கவிருக்கும் வசந்தகாலம். அன்றும், இன்றும், என்றும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மொஹரம், ரம்ஜான், கார்த்திகை, கிறிஸ்துமஸ் என எத்தனை பண்டிகைகள் வந்தாலும் நினைவுகளில் நீங்காத வசந்தகாலம் தொடங்குவதென்பது இளம் பருவத்தில் தான்.

பல தீபாவளிகளை இன்று வரை நாம் பார்த்திருந்தாலும் என்றும் நம் நினைவில் பள்ளிப் பருவத்தில் கொண்டாடிய தீபாவளிகளே, தீபாவளி என்றவுடன் நினைவிற்கும் வருகிறது, என்றும் நீங்காமல் நம் நினைவிலும் நிற்கிறது.   

என்ன தான் நவீனம் தோன்றினாலும், கம்ப்யூட்டரில் அல்லது அளவிற்கு அதிகமான பட்டாசு வெடித்தும், ரெடி மேட் உடைகளை உடுத்தி, தொலைபேசியில் உறவுடன் உரையாடி, குறுஞ் செய்தியில் வாழ்துக்களை பரிமாறி, தொலைக்காட்சியில் வரும் கலைஞர்களுடன் வீட்டிற்குள்ளேயே உறவாடி, பல்பொருள் அங்காடிகள் அல்லது இனிப்பகங்களில் விலையுயர்ந்த இனிப்பு கார திண்பண்டங்களை வாங்கி ஒரு மேம்பாடான தீபாவளியை இன்று நாம் கொண்டாடினாலும் நம் சிறுவயதில் இருந்த, நாம் அனுபவித்த அந்த எதார்த்தமும், உயிரோட்டமுமே இன்றும் என்றும் நம் நினைவில் நிற்கிறது.

தையர்காரரிடம் ஒருமாதத்திற்கு முன் தைக்க கொடுத்து காத்திருந்து புதுத் துணி வாங்கியதும், மிதமான குளிரில் வெயிலைத் தேடி பட்டாசுகளை காய வைப்பதும், அளவான பட்டாசானாலும் யாரும் பார்க்காத நேரத்தில் அக்கம்பக்க வீடுகளில் சேகரித்த வெடி காகிதங்களை நம் வீட்டு வாசலில் கொண்டுவந்து கொட்டுவதும், அம்மா பாட்டி சித்தி அத்தை என அனைவரும் ஒன்று கூடி தீபாவளிப் பலகாரங்கலான முறுக்கு, சீடை, தட்டை, லட்டு, அதிரசம் என்ன கார இனிப்பு வகைகளை தயாரிப்பதும் சுடசுட ஓடிவந்து அவற்றைக் கொரிப்பதும் அவற்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று நண்பர்களுடன் பகிர்வதும் என அன்று தீபாவளி கொண்டாடியதை இன்றும் என்றும் நம் நினைவில் வசந்தமாக உலவும் நினைவுகளை நம் குழந்தைகளுக்கும் குறைவில்லாமல் அளிக்கவேண்டுமல்லவா? 

இன்றைய குழந்தைகள் உணர்வுகளாலும் ஊட்டச் சத்துக்களாலும் குறைபாடுடன் வளர்கின்றனர், வாழ்கின்றனர். நாம் அனுபவித்தவற்றில் சிலவற்றையாவதும் அவர்களுக்கு பகிர்ந்தளித்தால் தான் நாளைய சமுதாயம் ஆரோக்கியத்துடன் மனதாலும் உடலாலும் திகழ முடியும். இன்றைய குழந்தைகளுக்கு வீட்டில் திண்பண்டங்கள் தயாரிப்பார்களா? தயாரிக்க முடியுமா? என்று  சந்தேகமும் உள்ளது.    

விலையுயர்ந்த பலகாரங்களை இன்றைய குழந்தைகளுக்கு வகை வகையாக நாம் கடைகளில் வங்கிக் கொடுகிறோம். இதனால் பிள்ளைப்பருவ வெறுமை நினைவுகளையும், உறவுகளின் அர்த்தமற்ற வாழ்க்கை பாதையை நிலைநிறுத்துவதோடு, எதிலும் பிடிப்பற்ற மற்றும் ஒருவித ஏக்க நிலையையும் அவர்கள் மனதில் உருவாக்குகிறது. பண்டிகைகளை உயிரோட்டமில்லாமல் கொண்டாட உணர்வினால் இவ்வளவு பாதிப்பு என்றாலும் உடலாலும் பல பாதிப்புக்குள்ளகின்றனர் இன்றைய குழந்தைகள். 

கடைகளில் இருந்து பெரும் நொறுக்குத்திண்ணிகள் திண்பண்டங்கள் யாவும் மைதா, All purpose flour என்று சொல்லக்கூடிய எந்த மாவு என்று தெரியாத சத்தற்ற மாவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இனிப்பிற்காக அதில் சேர்க்கப்படும் வெள்ளை சர்க்கரை, சாக்ரின் போன்றவற்றை உண்பதால் நம் பிஞ்சுகளின் வளர்சிதை மாற்றம் தடைப்படுவதோடு உடல் பருமனையும் உருவாக்குகிறது.

மேலும் அந்த திண்பண்டங்களில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் மற்றும் பலநாட்கள் வீணாகாமல் இருக்க செயற்கை பதப்படுத்தும் இரசாயனங்களாலும் பல சத்துகுறைபாடுகளும் உடலை உருக்கும் நோய்களும் உருவாகிறது.

நோய் எதிர்ப்பு திறன் குறைவதோடு குழந்தைகளின் செயல்திறன், அறிவுத்திறன், புத்திகூர்மை போன்றவையும் பெருமளவில் குறைந்து பதிப்புகுள்ளகின்றனர். இவற்றை அதிகமான அளவில் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு புற்று நோய் பதிப்பும் ஏற்படுகிறது. 

நிறைய உண்ணும் நம் குழந்தைகள் நல்லவற்றை உண்பதில்லை என்பதால் பருமனாக இருந்தாலும் ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளாகவே உள்ளனர். உலக தரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அதிகம் கொண்ட நாடாகவே இந்திய உள்ளது. 

இவ்வாறான ஊட்டச்சத்து குறைபாடுகளை நம் குழந்தைகளிடமிருந்தும் நம் இந்தியாவிலிருந்தும் வெளியேற்ற நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நம் சிறுதானியங்கள். ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் என்றும் நம்முடன் இருக்க நம் மரபிற்கும், மரபனுவிற்கும் பலநூறு ஆண்டுகளாக பரிச்சயமான தானியமே நம் சிறுதானியங்கள்.

வரவிருக்கும் பண்டிகையான தீபாவளிக்கு நம் மரபு தானியமான சிறுதானியங்களில் செய்த பலகரங்களையும், இனிப்பு வகைகளையும் தயாரித்து கொடுக்க, காலங்காலமாக நம் குழந்தைகளின் நினைவிலும் நாவிலும் அந்த  நினைவுகள் வசந்தமாக உலாவரும்.

ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலுவலகம், தொழில் என்று சுழன்று கொண்டிருக்கும் இந்த அவசர யுகத்தில் எளிதாக இந்த உணவுகளை தயாரித்து நம் குழந்தைகளை அசத்தலாம். கடைகளுக்கு சென்று இனிப்புகள், காரங்கள் என தேர்ந்தெடுத்து பில் போட்டு பணம் கொடுக்க காத்திருந்து வங்கி வரும் நேரத்திற்குள் இந்த பலகாரங்களை செய்தும் முடித்து விடலாம். 

பண்டிகை என்றாலே குதுகலம் அதிலும் இவ்வாறு நல்ல சத்தான பலகாரங்களை நம் குழந்தைகளுக்கு நம் கையில் தயாரித்து கொடுப்பதை விட வேறு என்ன குதுகலம் இருக்க முடியும் நமக்கு. அதுவும் உடலை ஆரோக்கியமாக்கும் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமான இந்த சிறுதானியங்களில் பலகாரம் செய்வது என்று நினைத்தாலே குதுகலம் தானே.

இன்றைய இந்த நிகழ்காலம் நாளைய நம் குழந்தைகளின் வசந்தகலமாக உலாவரும். நம் வீட்டு குழந்தைகள் மட்டுமில்லாது நம் உறவினர்களின் குழந்தைகளுடனும் பகிர்ந்து உண்பது என்றும் அவர்களின் நினைவிலும் நீங்காது இடம்பிடிக்கும். 

குளிர்கலங்களில் நம் முன்னோர்கள் இத்தனை இத்தனை பண்டிகைகளை வைத்ததற்கு காரணம் இந்த குளிரையும் குளிர்காலத்தையும் சமாளிக்கவும் உடல் சீராக இயங்கவும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகள் உடலுக்கு தேவை என்பதற்காக. அனைவருக்கும் இவை சென்று சேர வேண்டும் என்பதற்காகவே பரிமாற்றத்தையும், பகிர்ந்து உண்பதையும் இவற்றில் ஒரு பகுதியாக வைத்தனர்.

காரணம் தெரியாமல் கடைகளில் வாங்கி சத்தற்ற பலகாரங்களை இவ்வளவு நாள் நம்மவருக்கு கொடுத்திருந்தாலும் இனி காரணம் அறிந்து ஊட்டச்சத்துள்ள பலகாரங்களை உற்றார் உறவினர் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.  பல சிறுதானிய பலகாரங்கள் செய்முறை நமது வலைதளத்தில் உள்ளது.

நம் நினைவில் நிற்கும் நாம் கொண்டாடிய தீபாவளியை நம் குழந்தைகளுக்கும் சிறிது காட்டுவோம்  

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

புத்து கண்டு கிணறு வெட்டு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!