வாய், நாக்கு, தொண்டை புண்
- வாய், நாக்கு, தொண்டை புண் ஆற பப்பாளிப் பால் நல்ல பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும். புண் இருக்கும் இடங்களில் பப்பாளிப் பாலை தடவலாம்.
- நாக்கில் வரக்கூடிய நாக்குப் புண் குணமாக நெல்லி வேர் பட்டை சிறந்த பலனளிக்கும். நெல்லி வேர்ப்பட்டையை பொடி செய்து வைத்துக் கொண்டு தேனில் கலந்து நாக்குப் புண்ணிற்கு தடவலாம்.
- மணத்தக்காளி கீரையை அவ்வப்பொழுது உணவில் பச்சை தேங்காயுடன் சேர்த்து உண்பது சிறந்தது.
உதடு வெடிப்பு
- சத்துக் குறைபாடு அதிலும் வைட்டமின் பி சத்து குறைபடுவதால் பலருக்கும் உதடு வெடிப்பு ஏற்படும். இதற்கு அத்திக் காயை அடிக்கடி சாப்பிட நல்ல பலனை பெறலாம்.
- உதடு வெடிப்புக்கு கரும்புத் தோகையும் மருந்தாகிறது. கரும்புத் தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயில் கலந்து தடவ விரைவாக நல்ல குணம் தெரியும்.
உள் நாக்குச் சதை வளர்ச்சி தடுக்க
- குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரும் மற்றொரு தொந்தரவு உள் நாக்குச் சதை வளருவது. இதனை தடுக்க கொடம்புளி எனும் பழம் புளியை அரைத்து உள் நாக்கில் தடவி வரலாம். இது உள் நாக்கு சதை வளருவதை தடுக்கும்.
வாய் துர்நாற்றம்
- வாய் துர்நாற்றம் போக நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கக் கூடிய திரிபலா பொடியை குடிநீரில் ஊற வைத்து கொப்பளிக்க நீங்கும்.
- புதினாவும் வாய் துர்நாற்றத்தை போக்க உதவும். புதினாவை உப்புடன் சேர்த்து பொடித்து புதினா பல்பொடியாக பயன்படுத்தலாம். அதேப்போல் புதினாவை நன்கு மென்று தின்றாலும் தீரும்.
- ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னும் வாயை கொப்பளிப்பது அல்லது துலக்குவது வாய் துர்நாற்றத்திலிருந்து நம்மை பாதுகாக்கும்.
Related