நாக்கின் நிறம் சொல்லும் அறிகுறிகள்

உடலின் கண்ணாடிகளாக நமது முகம், பாதம், நகம் என நமது வெளியுறுப்புகள் உள்ளன. முகம் சொல்லும் அறிகுறிகள், பாதம் காட்டும் அறிகுறிகள், நகம் வெளிபடுத்தும் அறிகுறிகள் ஆகியவை நமது உடலின், உடல் உறுப்புகளின் தொந்தரவுகள், நோய்கள், பிரச்சனைகளை வெளிப்படுத்தும். அவ்வாறு நமது நாக்கின் நிறங்களும் உடலின் தொந்தரவுகள், நோய்களின் அறிகுறிகளை வெளிபடுத்தும்.

நாக்கு நோய்களை வெளிபடுத்துமா? என்கிறீர்களா. ஆம். ஒவ்வொருமுறையும் மருத்துவரிடம் ஏதேனும் நோய் அல்லது காய்ச்சலுக்காக செல்லும்பொழுதும் அவர் வாயைத் திறந்து நாக்கை காட்டச் சொல்வாரே நியாபகமிருக்கிறதா.. அதற்கு காரணம் மிக எளிதாக நமது நாக்கு நம் உடல், உள்ளுறுப்பின் கண்ணாடிகளாக செயல்படுவதுதான். சரி, இனி நாக்கு காட்டும் அறிகுறிகள், தொந்தரவுகளை நாமும் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப நமது ஆரோக்கியத்தில் அதிக அக்கறையை செலுத்துவோம். நமது உணவு, உடற்பயிற்சி, மன அமைதியிலும் கவனத்தை செலுத்தி நம் வாழ்வை இனிமையாக்குவோம்.

நாக்கின் நிறத்தின் அறிகுறிகளை தெரிந்துக் கொள்வதற்கு முன் நாக்கை சீராக பராமரிப்பது அவசியம். அன்றாடம் காலையில் பல் துலக்கியதும் நாக்கை நன்கு சுத்தம் செய்யவேண்டும். அதில் படிந்திருப்பதை அகற்றி வாயை கழுவ வேண்டும்.

ஆரோக்கியமான உடல்

ஆரோக்கியமான நாக்கு பிங்க் / ரோஸ் நிறத்தில் இருக்கும். பின் நிறத்தில் நாக்கு இருக்க நமது இரத்த ஓட்டம், செரிமானம், உள்ளுறுப்புகள் சீராக உள்ளது என தெரிந்துக் கொள்ளலாம்.

செரிமான கோளாறு

பலருக்கும் இருக்கும் பாதிப்பில் ஒன்று செரிமான கோளாறு. இந்த தொந்தரவும் மூல நோயும் உள்ளவர்களுக்கு சிமெண்ட் / கிரே நிறத்தில் நாக்கு இருக்கும்.

காய்ச்சல்

காய்ச்சல் மற்றும் அதிக உடல் சூடு இருக்க வாய், உதடு மற்றும் நாக்கு நல்ல சிகப்பு நிறத்திற்கு மாறியிருக்கும்.

சிறுநீரக பாதிப்புகள்

சிறுநீரக பாதிப்புகள், நோய்கள் உள்ளவர்களுக்கு நாக்கின் நிறம் ஊதா நிறத்தில் இருக்கும்.

பற்களை சுத்தமில்லை

பற்களை சுத்தமில்லை என்றால் பச்சை நேரத்தில் நாக்கு இருக்கும், அதேப்போல் கிருமிகளின் வளர்ச்சி அதிகமிருந்தாலும் இந்த நிறத்திலிருக்கும்.

நாள்பட்ட நோய்கள்

புகையிலை, கடுமையான நாள்பட்ட நோய்கள் கொண்டவர்களின் நாக்கு கருமை நிறத்தில் இருக்கும்.

வீக்கம் / தொற்று

ஏதேனும் தொற்று அல்லது வீக்கத்தால் உடல் பாதிக்கப்பட்டிருந்தால் நாக்கின் நிறம் சிவந்த ஊதா நிறத்திற்கு மாறியிருக்கும்.

கல்லீரல் நோய்கள்

சிலருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுப் பகுதியிலும் கல்லீரல் பகுதியிலும் தொந்தரவுகள் நோய்கள் இருந்தால் அவர்களின் நாக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது நீண்ட நாள் தொந்தரவுகளுக்கு மட்டுமல்ல அடிக்கடி வரும் பாதிப்புகளுக்கும் இவ்வாறான நிறத்தில் இருக்கும்.

சத்துக் குறைபாடு

நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களுக்கும், சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் நாக்கின் நிறம் வெளிறிய சிகப்பு / வெளிர் பிங்க் நிறத்தில் இருக்கும்.

தொற்று பாதிப்பு

உடலில் நோய் தொற்று ஏற்பட்டிருக்க அல்லது கிருமிகளால் காய்ச்சல், நீர் வற்றிப் போவது போன்ற தொந்தரவுகள் இருந்தால் வெளிர் வெள்ளை நிறத்தில் நாக்கு இருக்கும்.

நுரையீரல்

நுரையீரலில் பாதிப்புகள், தொந்தரவுகள் இருந்தால் காபி நிறத்தில் படிவமாக நாக்கு இருக்கும்.

இருதயம்

இருதய பாதிப்புகள் உள்ளவர்களும், இரத்தத்தில் ஏதேனும் நோய்கள் ஏற்பட்டிருப்பவர்களுக்கும் நாக்கு இளம் சிகப்பு நிறத்தில் இருக்கும்.

இவை மட்டுமில்லாமல் சிலருக்கு நாக்கு நன்கு தடித்து இருக்க சத்துக்களை சீராக உடல் உட்கிரகிக்கவில்லை என்றும் இதனால் சத்துக் குறைபாடு உள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம். அதேப்போல் நாக்கு மிக ஒல்லியாக இருக்க அவர்கள் உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளது என்றும் தெரிந்துக் கொள்ளலாம்.