தக்காளி பழ ஜூஸ் / Tomato Juice

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜூஸ். உடலுக்கு பலத்தை அளிக்கும், பல விதமான சத்துக்களை கொண்ட அற்புத பழம் தக்காளிப் பழம்.

பயன்கள்

உடலில் ஏற்படும் பல சத்து குறைபாட்டை நீக்கும். உடலை தேற்றவும், வலுவூட்டவும் பெருமளவில் துணைபுரியும். உடல் பருமனை குறைக்கும், சருமம் பளபளக்கும். கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

  • 3 தக்காளி பழம்
  • ¼ ஸ்பூன் மிளகுத்தூள்
  • ¼ ஸ்பூன் இந்துப்பு
  • தண்ணீர்

செய்முறை

  • தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்
  • அதனுடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள் இந்துப்பு கலந்தால் தக்காளிப் பழ ஜூஸ் தயார்.
  • சுவையான தக்காளிப் பழ ஜூஸ் நீரிழிவிற்கு சிறந்தது.
  • குழந்தைகளுக்கு அளிக்க மிளகுத்தூள், இந்துப்பை தவிர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்து அளிக்கவும்.
  • உடலுக்கு நல்ல பலத்தையும், வலுவையும் அளிக்கக்கூடியது. நீரிழிவை கட்டுப்படுத்தும். உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் கொண்டது. உடலுக்கு மிகுந்த நன்மை தரும் ஜூஸ். மிக எளிமையாக தயாரிக்கக் கூடியது.

1 thought on “தக்காளி பழ ஜூஸ் / Tomato Juice

Comments are closed.