மகிழ்ச்சி மருத்துவம்

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தோன்றக் கூடிய நோய்களுக்குக் மூலக் காரணம் நமது எண்ணங்களும் நமது செயல்களுமே. நீண்ட நாட்களாக ஏதோ ஒரு துன்பம் அல்லது மனவருத்தம் நமது எண்ணங்களில் சுழன்றுக் கொண்டிருக்க அது நோயாக உருவெடுக்கும் அபாயத்தைப் பெறுகிறது.

துன்பம் நோயை உண்டாக்கும்

அதிக மனவருத்தம், அதிக மனஅழுத்தம், மனச்சோர்வு, மனசஞ்சலம், போன்ற மனநோய்களுக்கு காரணம் துன்பம். ஒருவரை இடைவிடாத மகிழ்ச்சியில் வைத்திருப்பதன் மூலம் எந்த நோயும் குணப்படுத்திவிட முடியும் என சீன மருத்துவமுறை கூறுகிறார்கள்.

மகிழ்ச்சி

ஆனால் நோயால் பாதிக்கப் பட்டவர்களை என்நேரமும் மகிழ்ச்சி வைத்திருப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல. சில நேரங்களில் நோயால் பாதிக்கப் பட்டவர்களின் மகிழ்ச்சி மற்றவரின் துன்பமாகவும் அமையக்கூடும்; மற்றும் நோயால் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலையைப் பொருத்தும் அவர் மகிழ்ச்சி கைக்கெட்டும் தூரத்தில் எட்டாக்கனியாக கூட இருந்து விடக்கூடும்.

மகிழ்ச்சி என்பது தேடிச் செல்வது அல்லது நாம் உருவாக்குவதாகும் என்பது அடிப்படை உண்மை. இந்த அடிப்படை உண்மையை நோயாளி புரிந்துகொண்டால் மகிழ்ச்சி எளிதாகும்.

மகிழ்ச்சி மருத்துவம் என்றால் என்ன?

நோயால் பாதிக்கப்பட்டவரின் ஆளுமையை, அவரை வெளிக்கொணரும் வழியை அவருக்கு கற்றுத் தருவதே மகிழ்ச்சி மருத்துவமாகும். கலைப் பொருட்கள் தயாரிப்பது, தையல், ஓவியம், இசை, நாடகம், விளையாட்டு போன்ற மனம் இலயிக்கும் ஆயிரக்கணக்கான எளிய வழிகளில் நோயாளி விடா மகிழ்ச்சியை உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஒருவருக்கு எந்த செயலை விருப்பி செய்வதால் மன நிம்மதியும், மன அமைதி கிடைக்கிறது என்பதையும், எந்த செயலில் ஈடுபாடு உள்ளது, அவர்களது விருப்பம் எதில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதனை அவர்களது மனம் ஈடுபட்டு செயல்படும் வண்ணம் செயல்படுத்தப்பட உடலில் இருக்கும் நோய்கள் சிறிது சிறிதாக விலகத் தொடங்கி விடும்.

நோயை விரட்டும் ஆயுதம்

இதனால் ஏற்படும் மகிழ்ச்சி உடலில் பரவி இருக்கும் பொழுது நம் உடல் திசுக்கள், ஆக்சிஜனால் நிரப்பப்பட்டு, வெள்ளையணுக்கள் எந்த நோய் கிருமியையும் அடித்து விரட்டும் வலிமை பெறுகின்றன. இதனால் சுரப்பிகள் சரியாகச் சுரக்கின்றன, கழிவு பொருட்கள் நீங்குகின்றன.

நம் மகிழ்ச்சிக்கு நிலையான வழி மற்றவர்களை எப்போதுமே நாம் மகிழ்ச்சிப்படுத்த முயல்வதாகும்; பணியாற்றுவதாகும். ‘எல்லோரும் இன்புற்றிருக்க, என் கடன் அவர்களுக்குப் பணி செய்து கிடப்பதே’ என்ற சமூகப் பார்வை தரும் மகிழ்ச்சியை அனுபவித்தவர்களுக்கு எந்த நோயும் வருவதில்லை.