சதை போடுவதைத் தடுக்க
உடலில் மேலும் மேலும் சதை போடுவதைத் தடுக்க வாழைத்தண்டு சாறு அல்லது அருகம்புல் சாறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
உடல் மெலிவு பெற
பப்பாளிக்காயை சமைத்து உண்ணலாம். பப்பாளிக் காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் கலோரிக்கள் உடலில் தேங்கியிருக்கும் கசடுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்தும்.
ஊளைச் சதையை குறைய
உடலில் தேங்கியிருக்கும் ஊளை சதையை நீக்க உதவும் மிகச்சிறந்த பொருள் சோம்பு. ஆங்கில மருத்துவம் தமிழ் மருத்துவம் என அனைத்து மருத்துவ முறையிலும் சோம்பு நீர் பருக உடலில் தேங்கியிருக்கும் ஊளை சதை நீங்கும் என பரிந்துரைக்கபடுகிறது. வளர்சிதை மற்றத்தை சீராக்க உதவுகிறது சோம்பு. அடிக்கடி சோம்பு நீர் பருகலாம்.
உடல் எடை குறைய
அமுக்கிராவேர் மற்றும் பெருஞ்சீரகத்தை (சோம்பு) பாலில் காய்ச்சி குடித்து வர உடல் எடை விரைவாக குறையும். வளர்சிதை மற்றத்தை சீராக்க உதவுகிறது சோம்பு.
தேவையற்ற கொழுப்பு குறைய
பூண்டு, வெங்காயத்தை அதிகம் உணவில் சேர்த்து வர விரைவில் கொழுப்பு குறையும். பூண்டு மற்றும் வெங்காயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமுள்ளது. மேலும் சிறந்த ப்ரீபயாடிக் உணவாகவும் உள்ளது.
தேகம் கரைய
ஒட்டுமொத தேகமும் கரைய சுரைக்காய் சமைத்து உண்டு வரலாம். உடல் எடையும் சமநிலைப்படும்.
தொப்பை குறைய
சிலருக்கு உடலில் தொப்பைப் பகுதி மட்டும் தனியாக தெரியுமளவிற்கு இருக்கும். இவர்கள் தொப்பையை குறைக்க சுரைக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டுவரலாம்.
பருத்த உடல் மெலிய
பருத்த உடல் மெலிய மந்தாரை இலைகளும் வேரும் பெருமளவில் உதவுகிறது. மந்தாரை இலைகளில் உணவு உண்பதும், மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வருவதும் பருத்த உடல் மெலிய உதவுகிறது.
உடல் வலிமை பெற
தேகம் குறைந்து உடல் வலிமை பெற அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். ஊளை சதையும் குறையும்.
எடை கூடாமல் தடுக்க
பால் கலக்காத தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும்.