பல்லினைப் பாதுகாக்கும் வழிகள்

அன்றாடம் உண்ணும் உணவை நன்கு மென்று கடித்து உண்ணும் பற்கள் நமது அன்றாட ஓட்டத்திற்கு மிகவும் அவசியமானது. உணவை கடித்து உண்பதற்கு மட்டும் தானா பற்கள். முகத்தின் அழகை நிர்ணயிக்கும் பெரும்பங்கு பற்களுக்கு உண்டு. நமது சிரிப்பு, முகபாவம், தன்னம்பிக்கை என பலவற்றிற்கும் பற்கள் மிக அவசியம். இவை மட்டுமா நாம் பற்கள் இருந்தால் மட்டுமே சீராக பேசமுடியும்.

உடலின் பலமாக மற்றும் மிகவும் உறுதியான கடினமான பகுதி பற்கள். சுண்ணாம்பு சத்துக்கள் மற்றும் பல சத்துக்கள் பற்களுக்கு அவசியமான சத்துக்கள். உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிப்பது பற்கள். உணவு செரிமானமும் சீரான உட்கிரகிப்பும் நன்கு மைய உமிழ்நீருடன் கலந்து மென்ற உணவிலிருந்தே பெறப்படுகிறது. இதற்கு உறுதுணையாக இருப்பது பற்கள்.

பல வகையில் அவசியமான பற்களை நம் உயிர் இந்த உடலில் இருக்கும் வரை பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது. தொற்று நோய்கள், சுவாச கோளாறுகள், துர்நாற்றம் போன்றவற்றிக்கும் பற்கள் காரணமாக உள்ளது, அதனால் பற்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது.

பற்களை பாதுகாக்க

  • காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் சுத்தமாக பல் துலக்க வேண்டும். பல் துலக்க வேம்பு குச்சிகளைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது, அதற்கு சாத்தியமில்லை என்றால் மூலிகை பற்பொடி பயன்படுத்தலாம். ரசாயனங்கள் கொண்ட பேஸ்ட் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இதனால் பற்களின் உறுதி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சுவை முட்டுக்களும் பாதிக்கப்படும்.
  • ஊசி, குச்சி முதலிய கூர்மையான பொருட்களைக் கொண்டு பற்களைக் குத்தக்கூடாது.
  • அதிக சூடான அல்லது குளிர்ச்சியான பொருட்களை வாயில் போடாது இருக்க வேண்டும். மிக சூடு, குளிர்ச்சியான உணவுகளால் பற்கள் அதன் உணர்வை மெல்ல இழக்கும். அதிக சூடான பானம், சாதம் மற்றும் அதிகம் குளிர்ச்சியான ஐஸ் கிரீம் போன்றவற்றை அதிகம் உண்ணாமல் இருப்பது சிறந்தது.
  • ஒவ்வொரு முறையும் பல் தேய்க்கும் பொழுது ஈறுகளையும் கைகளால் நடுவிரலால் நன்கு மசாஜ் செய்வதுபோல் தேய்க்க வேண்டும்.
  • சாப்பிடும் பொழுது இரண்டு கடைவாய்களையும் பயன்படுத்த வேண்டும். உணவு வாயில் அனைத்து இடத்திலும் பயணித்து நன்கு மெல்லப்பட்டு விழுங்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் வாயை நன்றாகக் கொப்பளித்துத் துப்ப வேண்டும். இதனால் இடுக்குகளில் தேங்கியிருக்கும் உணவு துகள்கள் நீங்கும்.
  • பிறந்த குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டே தூங்கிவிடும். அந்த குழந்தையின் வாயை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யவேண்டும். அதிகநேரம் பால் பற்களில் இருந்தால் பற்களில் சொத்தை ஏற்படும்.
(1 vote)