தொண்டை கரகரப்பு தீர

சிலருக்கு பருவநிலை மாற்றத்தினாலும் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவதாலும், அதிக அலைச்சல், சோர்வு, தொற்று போன்ற தொந்தரவுகளாலும் தொண்டை கரகரப்பு, புண், குரல் கம்மல், தொண்டை வலி, இருமல், சுவாசக்குழாய் அலர்ஜி ஏற்படும். இந்த தொந்தரவுகள் பார்க்க சாதாரணமாக இருந்தாலும் வலியையும் ஒரு வித தொண்டை கரகரப்பு மற்றும் எரிச்சலையும் அளிக்கும்.

தண்ணீர் மற்றும் உணவைக்கூட நிம்மதியாக விழுங்க முடியாத வலியையும் அளிக்கும். இதற்கு மருந்து மாத்திரை என இரசாயனங்களைத் தேடிச் சென்றால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். வீட்டிலேயே மிக எளிமையாக சில வைத்திய முறைகளைக் கையாள இந்த தொந்தரவுகள் வராமல் நம்மை நாம் பாதுகாக்க முடியும், வந்தாலும் விரைந்து அதிலிருந்து வெளிவரவும் முடியும்.

பருவநிலை மாறும் பொழுது அன்றாடம் இளம் சூடான நீரைப் பருகுவது சிறந்தது.
காலையில் நான்கு கல் உப்பை வெதுவெதுப்பான சுடுநீரில் கலந்து அதனைக் கொண்டு தொண்டைவரை கொப்பளித்து துப்பவேண்டும். இவ்வாறு செய்வதால் தொற்று பாதிப்புகள் மட்டுமல்லாமல் வலியையும் குறைக்கும்.

அன்றாடம் காலையில் எண்ணெய் கொப்பளித்தல் செய்வது சிறந்தது. இதனால் தொண்டை கரகரப்பு, புண், தொற்று மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் பல நோய்களையும் போக்கும். குறிப்பாக மூட்டுவலிக்கு மிக சிறந்த மருந்து.
மாதுளம் பூ, பட்டை ஆகியவற்றை தண்ணீரில் காய்ச்சி அதனைக் கொண்டும் தொண்டை வரை வாய் கொப்பளிக்கலாம்.


விளக்கெண்ணெயுடன் சுண்ணாம்பு சேர்த்து சூடு செய்து பொறுக்குமளவு சூட்டில் தொண்டைப் பகுதியில் வெளிப்பூச்சாக தடவ நல்ல பலன் கிடைக்கும்.
கிராம்பை தணலில் இட்டு வதக்கி பின் வாயில் வைத்து சுவைக்க நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு சிட்டிகை அளவு அதிமதுரப் பொடியை எடுத்து தேனில் கலந்து நாக்கில் நக்கி சுவைக்க நல்ல பலன் கிடைக்கும்.


சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சமமாக கலந்து வைத்துக் கொண்டு ஒருசிட்டிகை அளவு என எடுத்து தேனில் கலந்து மூன்று வேளை எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
மா இலையை நெருப்பில் போட்டு அதனை வாயால் புகைக்க தொண்டை கட்டு நீங்கும்.

(3 votes)