தூதுவளை துவையல்

மழை, குளிர் காலங்களில் ஏற்படும் சளி இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு மிகச் சிறந்த மருந்து இந்த தூதுவளை துவையல். சாதாரணமாக எல்லா இடங்களிலும் பார்க்கக்கூடிய ஒரு மூலிகை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பயன்படும் ஒரு மூலிகை செடிதான் இந்த தூதுவளை.

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்று. இதன் இலை, காய், வேர் என அனைத்தும் மருத்துவகுணங்கள் கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டது இந்த தூதுவளைக் கீரை. அது மட்டுமில்லாமல் மிக எளிமையாக வீடுகளில் இந்த தூதுவளையை வைத்து வளர்க்கலாம். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று எல்லா இடங்களிலும் பார்க்கக் கூடிய தூதுவளை, மற்றொன்று வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வெண்தூதுவளை.

தேவையான பொருட்கள்

  • ஒரு கைப்பிடி தூதுவளை இலை
  • 5 சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் தனியா
  • ½ ஸ்பூன் சீரகம்
  • சிறிது கொடம் புளி அல்லது சுட்ட புளி
  • 2 – 3 வரமிளகாய்
  • உப்பு
  • சிறிது நல்லெண்ணெய்

செய்முறை

  • வரமிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து பொடியாக நுணுக்கிக் கொள்ளவேண்டும்.
  • தூதுவளை இலைகளை நன்கு ஆய்ந்து, சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • தூதுவளை இலையையும் சின்ன வெங்காயத்தையும் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இவை அனைத்தையும் கொடம்புளி அல்லது சுட்ட புளி, உப்பு சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ள வேண்டும்.
  • அவ்வளவுதான் நல்ல சுவையான தூதுவளை துவையல் தயார்.

5 from 1 vote

தூதுவளை துவையல்

சளி, தலையில் நீர் கோர்த்தல், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு மருந்தாகும் இந்த துவையல். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். மழை பனி காலங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் இதனை உண்டு வருவதால் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
Side Dish
Indian
thuvaiyal recipe in tamil
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 10 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • ஒரு கைப்பிடி தூதுவளை இலை
  • 5 சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் தனியா
  • ½ ஸ்பூன் சீரகம்
  • சிறிது கொடம்புளி அல்லது சுட்ட புளி
  • 2 – 3 வரமிளகாய்
  • உப்பு
  • சிறிது நல்லெண்ணெய்

செய்முறை

  • வரமிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து பொடியாக நுணுக்கிக் கொள்ளவேண்டும்.
  • தூதுவளை இலைகளை நன்கு ஆய்ந்து, சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தூதுவளை இலையையும் சின்ன வெங்காயத்தையும் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இவை அனைத்தையும் கொடம்புளி அல்லது சுட்ட புளி, உப்பு சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ள வேண்டும்.
  • அவ்வளவுதான் நல்ல சுவையான தூதுவளை துவையல் தயார்.

சளி, தலையில் நீர் கோர்த்தல், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு மருந்தாகும் இந்த துவையல். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். மழை பனி காலங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் இதனை உண்டு வருவதால் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.

1 thought on “தூதுவளை துவையல்

  1. சாரா

    5 stars
    நன்றி

Comments are closed.