Mimosa Pudica; தொட்டாற்சிணுங்கி; தொட்டால் சிணுங்கி
தொட்டால் சிணுங்கி என்ற தொட்டாற்சிணுங்கி பலருக்கும் பிடிக்கும் ஒரு அற்புதமான மூலிகை. குழந்தைகள் உட்பட அனைவருமே இந்த தொட்டாசிணுங்கி சிணுங்குவதை பார்க்க பிடிக்கும். செடி சிணுங்குமா? என்கிறீர்களா.. ஆம் அதனாலேயே இதற்கு தொட்டாற்சிணுங்கி என பெயர். செடி கொடி மரங்களுக்கும் உணர்வுண்டு என எதார்த்தமான உண்மையை அனைவருக்கும் சொல்லும் ஒரு மூலிகை இது. தொட்டாற்சிணுங்கியை தொடுவதால் நமக்குள் ஒருவித சக்தியும் கண்ணுக்கு தெரியாத பிரபஞ்ச ஆற்றலும் ஏற்படுகிறது.
தொட்டால் சிணுங்கி, தொட்டாற் சுருங்கி, தொட்டாற் சுணுங்கி, இலச்சகி, தொட்டாற் கணங்கி, தொட்டால் வாடி, தொட்டால் வயிறு, சுண்டி என பல பெயர்கள் இதற்கு உண்டு. சிறுசிறு இலைகளாக இரண்டு பக்கமும் என மூன்று கொத்து இலைகள் சேர்ந்திருக்கும். இலைகளை யாராவது தொட்டால் வாடி விடும் இயல்புடையதால் இப்பெயர்களை இந்த மூலிகை பெற்றது. ஈரமான நிலப்பரப்பில் சாதாரணமாக பார்க்கக் கூடிய ஒரு சிறு செடி மூலிகை இது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இதனைப் பார்க்க முடியும்.
மயிர்கள் போன்ற அமைப்புடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இதன் மலர்கள் இருக்கும். கனிகளின் விளிம்புகளில் முள் போன்ற சொரசொரப்பான உரோமங்கள் இருக்கும். ஐந்து விதைகள் கனியின் உள்ளே தட்டையாக இருக்கும். இனிப்பு சுவை கொண்ட தொட்டாற் சிணுங்கியின் இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன்கொண்டது. மனோதிடத்தையும், உடலின் காந்த ஆற்றலையும் அதிகரிக்கும் மூலிகை. இந்த செடி முழுவதும் முட்கள் இருக்கும்.
உடலைத் தேற்றக்கூடிய ஆற்றல் கொண்ட இது காமத்தைப் பெருக்கும் தன்மையும் கொண்டது. மேலும் நீரிழிவு, மூலம், பௌத்திரம், மூத்திர நோய்களுக்கும் சிறந்த பலனை அளிக்கும். இதன் இலைகளை நீரில் காய்ச்சி பருக பல நோய்கள் பறந்தோடும். காலை நேரத்தில் இந்த தொட்டால் சிணுங்கியை தொடர்ந்து தொட்டு வர கண்ணுக்கு தெரியாத உடல் ஆற்றல் அதிகரிக்கும்.
நீரிழிவு கட்டுப்பட
தொட்டாற்சிணுங்கி இலையையும், வேரையும் எடுத்துவந்து சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை கால் ஸ்பூன் அளவு எடுத்து தினமும் இரண்டு வேளைகள் உட்கொண்டுவர நீரிழிவு கட்டுப்படும்.
மூலம், பௌத்திரம் புண்களுக்கு
தொட்டாற்சிணுங்கி இலையை பறித்துவந்து அதனை இடித்து சாறுபிழிந்து அந்த இலைச்சாற்றைப் கட்டிகள் மீது பூச மூலம், பௌத்திரம், புண் மறையும்.
வலிகள் வீக்கங்கள் தீர
தொட்டாற்சிணுங்கி இலையை நீரில் காய்ச்சி ஒற்றடமிட இடுப்பு வலி, பிற வலிகள் நீங்கும். தொட்டாற்சிணுங்கி இலையை மைய அரைத்து வீக்கங்கள், கை, கால், மூட்டு வீக்கங்களின் மீது கட்ட வீக்கம் தணியும்.
சிறுநீர் தொந்தரவுகள் தீரு
தொட்டாற்சிணுங்கி வேரைக் கஷாயமாக்கி குடித்துவர சிறுநீரக நோய்கள், சிறுநீர் தொந்தரவுகள் தீரும்.