தூயமல்லி அரிசி கொழுக்கட்டை

சத்தான சுவையான பாரம்பரிய அரிசி கொழுக்கட்டை. சாதாரணமாக தயாரிக்கும் அரிசி கொழுக்கட்டைக்கு பதிலாக பாரம்பரிய வெள்ளை அரிசி தூயமல்லி அரிசியில் கொழுக்கட்டை தயாரித்து உண்ண உடல் நலம் மேம்படும். உடலில் ஏற்படும் நாள்பட்ட தொந்தரவுகளுக்கும் இந்த அரிசி உணவு சிறந்தது. இயற்கையில் விளையும் இந்த தூயமல்லி அரிசியின் பயன்கள் மற்றும் மருத்துவகுணங்கள் எண்ணிலடங்காதது.

தேவையான பொருட்கள்

  • 1 கப் தூயமல்லி அரிசி
  • 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 3 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 பொடியாக நறுக்கிய வர மிளகாய்
  • சிறிது கருவேப்பில்லை
  • சிறிது கொத்தமல்லி தழை
  • 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • உப்பு

தாளிக்க

  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் உளுந்து

செய்முறை

  • தூயமல்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து ஊற வைக்க வேண்டும்.
  • பின் அரிசியை கரகரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.
  • ஒரு அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கி உப்பு சேர்க்கவும்.

  • அதனுடன் அரைத்த தூயமல்லி அரிசி மாவை சேர்த்து சிறு தீயில் கிளறவும்.
  • மாவு கெட்டிப்பாட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • சிறிது ஆறியதும் கை பொறுக்கும் சூட்டில் கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் ஒரு 7 நிமிடம் முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சூடான சுவையான சத்தான தூயமல்லி அரிசி கொழுக்கட்டை.

5 from 1 vote

தூயமல்லி அரிசி கொழுக்கட்டை

சத்தான சுவையான பாரம்பரிய அரிசி கொழுக்கட்டை. சாதாரணமாக தயாரிக்கும் அரிசி கொழுக்கட்டைக்கு பதிலாக இந்த தூயமல்லி அரிசியில் கொழுக்கட்டை தயாரித்து உண்ண உடல் நலம் மேம்படும். உடலில் ஏற்படும் நாள்பட்ட தொந்தரவுகளுக்கும் இந்த அரிசி உணவு சிறந்தது.
ஆயத்த நேரம் : – 2 hours
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 2 hours 15 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் தூயமல்லி அரிசி
  • 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 3 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 பொடியாக நறுக்கிய வர மிளகாய்
  • சிறிது கருவேப்பில்லை
  • சிறிது கொத்தமல்லி தழை
  • 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • உப்பு

தாளிக்க

  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் உளுந்து

செய்முறை

  • தூயமல்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து ஊற வைக்க வேண்டும்.
  • பின் அரிசியை கரகரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.
  • ஒரு அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கி உப்பு சேர்க்கவும்.
  • அதனுடன் அரைத்த தூயமல்லி அரிசி மாவை சேர்த்து சிறு தீயில் கிளறவும்.
  • மாவு கெட்டிப்பாட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • சிறிது ஆறியதும் கை பொறுக்கும் சூட்டில் கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் ஒரு 7 நிமிடம் முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சூடான சுவையான சத்தான தூயமல்லி அரிசி கொழுக்கட்டை.

1 thought on “தூயமல்லி அரிசி கொழுக்கட்டை

Comments are closed.