Euphorbia tortilis; திருகு கள்ளி
தமிழகத்தின் காட்டுப்பகுதிகள், புதர்கள், அடர் மரங்கள் செடிகள் இருக்கும் பகுதிகளில் பார்க்கப்படும் ஒரு மூலிகை திருகு கள்ளி மூலிகை. பொதுவாக நகரங்களில் இதனைப் பார்ப்பது சற்று அரிது, ஆனால் கிராமங்களில் இதனைப் பரவலாக காட்டுப் பகுதிகளில் பார்க்க முடியும்.
பக்கவாதம், கால் கைகளில் வரும் வலிகள், சுவாசப் பாதைகளில் வரும் பிரச்சனைகளுக்கு சிறந்த மூலிகை திருகு கள்ளி மூலிகை.
சாதாரண பலவகைக் கள்ளி செடியைப் போல் முட்களுடன் இருக்கும் இந்த செடியின் அமைப்பில் ஆங்கங்கே திருகியவாறு இருக்க திருகு கள்ளி எனப்படுகிறது. இதனை வசிய மருந்து செய்யவும் பயன்படுத்துவதுண்டு. கள்ளி வகை செடிகளில் அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த திருகு கள்ளி புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதுமாகும். எலும்பு நோய்கள், வாத நோய்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.
இயற்கை உயிர்வேலி
உயிர்வேலிக்கு சிறந்ததாக இருக்கும் இது அடர்த்தியாகவும், கனமாகவும் வளரும். விசப்பாம்புகள் சில நேரங்களில் இதன் ஆழமான அடர் பகுதியில் தங்கக்கூடும் அதனால் சற்று கவனமாக இதனருகில் செல்ல வேண்டும்.
வலிகள் வீக்கங்களுக்கு
வீக்கங்கள், வலிகள், தொற்றுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும். கை கால்களில் ஏற்படும் கடுப்பு தீர திருகு கள்ளியின் வெளிப்புற தோலை நீக்கிவிட்டு அதன் உள்ளிருக்கும் சதையை ஒரு குவளை அளவு எடுத்து ஒரு சட்டியில் வைத்து அடுப்பில் சூடேற்றி பின் அதனை ஒரு துணியில் கொட்டி இளம் சூட்டில் கடுப்பு, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க விரைவில் நீங்கும். இதனைக் கொண்டு பக்கவாதத்திற்கு எண்ணெய் காய்ச்ச நல்ல பலனைத் தரும்.