சுவையான குழந்தைகள் விரும்பும் சத்தான சிறுதானிய ஸ்நாக்ஸ். இயற்கை முறையில் விளைந்த நாட்டு ரக ஆளிவிதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். அதுவே உடலுக்கு நல்லது.
தேவையான பொருட்கள்
- 2 ½ கப் Organic ஆளி விதை
- 2 ½ கப் தினை மாவு
- 2 கப் நாட்டு பசு நெய்
- 3 – 4 கப் நாட்டு சக்கரை (அ) வெல்லம்
- 100 கிராம் முந்திரிப் பருப்பு
- 100 கிராம் பாதாம்
- 1 ஸ்பூன் பிஸ்தா
- 1 ஸ்பூன் உலர்ந்த திராட்சை
- 15 பொடித்தது ஏலக்காய்
செய்முறை
- இரும்பு சட்டியில் ஆளி விதையை வாசம் வரும் வரை வறுக்கவும்.
- பின் தினை மாவையும் சிறிது நெய் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.
- பாதாம், பிஸ்தா, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக உடைக்கவும்.
- வறுத்த ஆளி விதையை மிக்சியில் ஒன்னும் பாதியுமாக உடைக்கவும்.
- வெல்லத்தை தண்ணீர் சேர்த்து பாகு எடுக்கவும்.
- பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தாவோடு ஏலப்பொடி, உலர் திராட்சை சேர்த்து வறுத்த தினை மாவு பொடித்த ஆளிவிதையுடன் நெய் சேர்த்து தேவையான வெல்லப் பாகையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- நன்கு கிளறிய சூடன இந்த கலவையை ஒரு சதுர தட்டில் பரப்பி நன்கு அழுத்திவிடவும். அழுத்திய கலவையை சிறுசிறு துண்டுகளாக வகுந்து வைக்கவும்.
- தினை ஆளிவிதை பர்ப்பி தயார்.
- சுவையான தினை ஆளிவிதை பரப்பியை வரும் விசேச நாட்களுக்கு செய்து குழந்தைகளுக்கு தரலாம்.
- சுவையான குழந்தைகள் விரும்பும் சத்தான சிறுதானிய ஸ்நாக்ஸ். இயற்கை முறையில் விளைந்த நாட்டு ரக ஆளிவிதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். அதுவே உடலுக்கு நல்லது.
ஆளி விதை தினை பர்ப்பி