ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் “பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து என பல சத்துக்களை உள்ளடக்கிய சிறு தானியம் நம் தினை.
முருகன் வள்ளி எனும் புராண கதைகளில் வரும் தினையும் தேனும் என்பதிலிருந்து தினை எவ்வளவு பழமையான தானியம் என்று தெரிந்து கொள்ளலாம்.
பழமை மட்டுமா மலைகளில் விளையும் இந்த தானியம் நம் மரபணுவில் அதிக பரிட்சயம் கொண்டது என்றும் தெரிந்து கொள்ளலாமே.
சிறு மஞ்சள் நிற தானியமான இந்த தினை இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. இனிப்பு சுவை கொண்ட பலகரங்களுக்கு ஏற்றது இந்த தானியம்.
மேலும் தினை அரிசியின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – தினை அரிசி
மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- 1 கப் தினை
- ¾ கப் பொடி செய்த கருப்பட்டி
- ½ கப் தேங்காய் துருவல்
- 5 ஏலக்காய்
- சிறிது பசு நெய் – சிறிது / தேங்காய் எண்ணெய்
செய்முறை
- முதலில் தினையை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறியதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் கருப்பட்டி, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
- பிறகு அரைத்தக் கலவையினை பணியாரக் கல்லில் ஊற்றி சிறிது பசு நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.
- வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.
- சுவையான தினை கருப்பட்டி பணியாரம் தயார்.
தினை கருப்பட்டி பணியாரம்
ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் "பி', பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து என பல சத்துக்களை உள்ளடக்கிய சிறு தானியம் நம் தினை. முருகன் வள்ளி எனும் புராண கதைகளில் வரும் தினையும் தேனும் என்பதிலிருந்து தினை எவ்வளவு பழமையான தானியம் என்று தெரிந்து கொள்ளலாம். பழமை மட்டுமா மலைகளில் விளையும் இந்த தானியம் நம் மரபணுவில் அதிக பரிட்சயம் கொண்டது என்றும் தெரிந்து கொள்ளலாமே. சிறு மஞ்சள் நிற தானியமான இந்த தினை இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. இனிப்பு சுவை கொண்ட பலகரங்களுக்கு ஏற்றது இந்த தானியம்.
பரிமாறும் அளவு : – 3