Desmotachya bipinnata; Kusha Grass; Halfa Grass; Big cordgrass; Darbha grass
அமிர்த வீரியம் என்று அழைக்கப்படும் புல் வகையை சேர்ந்தது தருப்பைப் புல். மங்கல, அமங்கலங்களுக்கு பயன்படும் மூலிகை. பல தோஷங்களை சமப்படுத்தும். ஹோமத்திலும் சத்தியைப் பெற பயன்படுகிறது. வெயில், மழை என எதனாலும் பாதிக்கபடாத மூலிகை. காய்ந்து சருகானாலும் வீரியம் குறையாத மூலிகை. இயற்கையாக உணவை பாதுகாத்து பதப்படுத்தும் மூலிகையும் இது. ‘தர்பை’ என்றும் இதனை அழைப்பதுண்டு.
திருநள்ளாறு திருத்தலத்தில் தலை விருட்சமாக இருக்கும் மூலிகை. செடி முழுவதும் மருத்துவக் குணமுடையது. வாய்க்கால் வரப்புகள், ஆற்றங்கரை ஓரங்களில் அடர்ந்து உயர்ந்து வளரும். வேதங்களிலும், கீதையிலும் புனிதமான மூலிகை என்றும் ஆற்றல் நிறைந்த மூலிகை என்றும் இடம் பிடித்த சிறந்த மூலிகை இந்த தரப்பை மூலிகை.
கிரகணமும் தருப்பைப் புல்லும்
கிரகண காலங்களில் அதாவது சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் உணவு பொருட்களின் மீது காலம் காலமாக இந்த தருபைப் புல்லை போட்டு வைக்கும் பழக்கம் நமது இந்திய பாரம்பரியத்தில் உள்ளது. தயிர், நீர், பால், காய், கனி போன்ற உணவு பொருட்களில் எந்த தீங்கும் ஏற்படக்கூடாது, கிரகண கதிர்வீச்சுகளாலும், நுண் கிருமிகளாலும் பாதிக்கப்படாது என்பதற்காக இந்த முறையை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். இன்று பல ஆய்வு முடிவுகளும் இதனை நிருபித்துள்ளது. மேலும் கிரகண காலங்களில் ஏற்படும் நுண்கிருமிகள், நோய் தாக்குதலையும் அகற்றும் சிறந்த மூலிகையாகவும் தருப்பை உள்ளது,
தருப்பை மருத்துவம் பயன்கள்
தருப்பைப்புல், விசேஷ சக்தி கொண்ட மூலிகை. இந்த மூலிகை தோஷம், சிறிய விஷக்கடி, விஷங்கள் மற்றும் தாவர விஷங்களையும் முறிக்கும் தன்மைக் கொண்டது. மேலும் பல விதங்களில் ஆத்மா பலத்தையும், மனோபலத்தையும் அளிக்கிறது. அரிய சக்தி நிறைந்த மூலிகை இது. புல் வகை தாவரங்களிலேயே சிறப்புடைய புல்லாகச் போற்றப்படும் மூலிகை. வைதீக காரியங்களுக்கும் சடங்குகளுக்கும் வேதியர்கள் பலரும் தர்ப்பைப்புற்களைத்தான் பயன்படுத்துகின்றனர். தாக வேட்கை, பெருநோய்கள், சகலவிதமான சுரங்கள் ஆகியவற்றைக் போக்கும் தன்மை கொண்டது. பல அரிய சக்தி தர்ப்பைப்புற்களுக்கு உண்டு. உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல் ஆகியவையும் நீங்கும்.
இல்லை, அருகம் புல்லும் தருப்பைப்புல்லும் வேறுவேறு. இரண்டு புல் வகை தாவரங்கள்.