தண்ணீர்விட்டான் – நம் மூலிகை அறிவோம்

Asparagus Racemosus; Water Foot; தண்ணீர் விட்டான்

கோடைக்கு இதமளிக்கும் மூலிகைகளின் வரிசையில் வரக்கூடியது தண்ணீர் விட்டான் மூலிகை. இந்த மூலிகை கொடியின் கிழங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு. உட்சூட்டைத் தணிக்கும் ஆற்றல் நிறைந்த கிழங்கு இது, மேலும் உடலுக்கு நல்ல பலத்தையும் அளிக்கும். சதாமூலம், சதாவேலி, சதாவரி, சதாமூலம், துண்ணீர்விட்டான், ஆகேருகம், நாராயணி, உதகமூலம், வரிவரி, பறனை, சீக்குவை என பல பெயர்கள் இந்த மூலிகைக் கொடிக்கு உண்டு.

தண்ணீர் விட்டான் கொடி வறண்ட நில தாவரமாகும். தண்டு போல் இருப்பதே இதன் இலைகள். நல்ல பச்சை நிறம் கொண்டது இந்த தாவரம். இதன் மலர்கள் வெள்ளை நிறத்திலிருக்கும். இந்த தண்ணீர் விட்டானின் சல்லிவேர்கள் தடியாக வேர்க் கிழங்குகளாக இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இந்த வேர் மற்றும் இலைகள் பயன்படும் பகுதிகள். இந்த வேர்க்கிழங்குகள் உலர்ந்த பின் மருத்துவத்திற்குப் பயன்படக் கூடியது.

தண்ணீர் விட்டான் கிழங்கு

  • உடல் பலத்தை அதிகரிக்கும் இந்த தண்ணீர் விட்டான் நீரிழிவு, உடல் வலி, வெட்டை போன்றவற்றிற்கு சிறந்தது, தாய் மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவும் மூலிகையாகவும் உள்ளது. ஆண்களுக்கு அண்மையை அதிகரிக்கும். தண்ணீர் விட்டான் கிழங்கை இடித்து நீரில் ஓரிரவு ஊறவைத்துக் பருக அம்மை நோய் மட்டுப்படும்.
  • நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கை நசுக்கி பாலில் வேகவைத்து அந்த பாலை பருகிவர வெப்பத்தினால் ஏற்பட்ட சுவையின்மை, பித்தம், வெள்ளை, செரியாக் கழிச்சல் போன்றவை நீங்கும்.

தண்ணீர் விட்டான் இலை

  • இந்த தண்ணீர் விட்டான் இலையை வேகவைத்து அல்லது நெய்யில் வாட்டி கொப்புளங்களில் கட்ட கட்டிகள் கொப்புளங்கள் மறையும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி

  • பல நோய்களுக்கு மருந்தாக இருக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை அரை ஸ்பூன் அளவு காலை, மாலை தண்ணீரில் கலந்து பருக நீரிழிவு, தீராத காய்ச்சல், எலும்புருக்கி நோய் ஆகியன தீரும்.
  • வாத கப நோய்களுக்கு தண்ணீர்விட்டான் கிழங்கின் பொடியை தேன் கலந்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றில் ஏற்படும் வாத நோய்கள், கபநோய்கள் மறையும்.
(1 vote)