தங்கச் சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

அன்றாடம் உணவிற்கு ஏற்ற சிறந்த ஒரு பாரம்பரிய அரிசியை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

தங்கம் போல மினுமினுக்கக் கூடிய நெல் ரகம் என்பதால் இந்த ரகத்திற்கு தங்கச் சம்பா என பெயர்கொண்டது. சிகப்பு நிறத்தில் தங்கம் போல பளபளக்கக் கூடியது இந்த நெல்லின் நிறம். இந்த தங்க சம்பா அரிசியின் நிறம் வெள்ளை நிறம். அதிலும் சன்ன ரகம்.

பொதுவாக தமிழகத்தில் வெள்ளை நிற சன்ன அரிசியைப் பார்த்தாலே பலருக்கும் ஆனந்தமாக இருக்கும். மல்லிகைப் போல மலர்ந்து வெள்ளை வெளேரென்று மென்மையாக இருக்க பல இல்லத்தரசிகளின் விருப்ப அரிசியாகவும் உள்ளது. அதிலும் சாதாரண வெள்ளை அரிசி இல்லை.. பாரம்பரிய அரிசியில் வெள்ளை நிற சன்ன அரிசி அதிக மருத்துவ குணங்களைக் கொண்ட அரிசி.

பல பல சத்துக்கள் கொண்டிருக்க கூடிய ஒரு அற்புதமான தங்கச் சம்பா அரிசி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளையும், நாள்பட்ட நோய்களையும் விரட்டக் கூடிய ஒரு சிறந்த அரசி. தொடர்ந்து இந்த தங்கச் சம்பா அரிசியை உண்பதனால் சருமம் பளபளப்பாகும், தங்கம் போல் மின்னும், இளமையும் அதிகரிக்கும்.

தோலில் ஏற்படும் தொந்தரவுகள், புண், கருந்திட்டுகள், உள்ளுறுப்புகளில் ஏற்படும் தொந்தரவுகள், நீரிழிவு, இருதய நோய் உட்பட பல நாள்பட்ட நோய்களையும் விரட்டக் கூடியது. பற்களுக்கு வலுவூட்டக் கூடியது. இரத்த ஓட்டத்தை சீராக்கக் கூடியது.

மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைபாடு, பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை சார்ந்த தொந்தரவுகள், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை சீராக்கக் கூடிய ஒரு சிறந்த ரகம் இந்த தங்கச் சம்பா அரிசி. செல் சிதைவை தடுக்க கூடியதாகவும், செல்களுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதற்கும் உதவக் கூடிய அரிசி.

புரதச் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள், வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த அரிசி. உடலின் ஆற்றலை அதிகரிக்கக்கூடியது. புத்துணர்வைக் அளிக்கக்கூடிய அரிசியாகவும் உள்ளது.

டெல்டா பகுதியில் அதிகமாக விளையக் கூடிய இந்த அரிசியைத் தொடர்ந்து உண்பதால் நீண்ட ஆயுளையும் பெற முடியும். பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் என எந்தத் தாக்குதலும் இன்றி இயற்கை முறையில் ஆரோக்கியமாக விளையக்கூடிய அரிசி இந்த தங்கச் சம்பா அரிசி. ஆறு மாதங்கள் விளையக்கூடியது, சம்பா பட்டத்திற்கு ஏற்றது.

மதிய சாப்பாட்டிற்கு உகந்த ரகம். தங்க சம்பா சாதம் சமைத்து உண்ண சுவையாக இருக்கும். பலகாரங்கள், இனிப்பு வகைகளையும் தயாரிக்கலாம்.

(14 votes)