இளைஞர்கள் தொடங்கி பெரியார்களுக்கும் அவ்வப்பொழுது வரும் ஒரு தொந்தரவு தலை சுற்றல். நிலை தடுமாறுதல், மயக்கம் போன்ற அறிகுறிகளையும் இவை அளிக்கும். போதுமான அளவு பலமில்லாத ஒரு உணர்வையும் தலை சுற்றல் அளிக்கும். சிலருக்கும் கண் பார்வை, செவிதிறனும் கூட பாதிக்கப்படும். உடற்பயிற்சி, அதிக நீர் சத்துள்ள உணவுகள், சத்தான உணவுகளுடன் எளிமையாக வீட்டிலிருக்கும் சில முலிகைகளைக் கொண்டு இந்த தலை சுற்றலை குணமாக்கலாம். கீழிருக்கும் சில மிளகு, சீரகம் போன்றவற்றை வீட்டிலிருக்கும் அஞ்சறைப் பெட்டியில் வைத்திருப்போம், மற்றவற்றை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். எல்லா இடங்களிலுமே கிடைக்கக் கூடியதுதான் இந்த பொருட்கள். இவற்றை கொண்டு ஒரு பொடி தயாரித்து வைத்துக்கொள்ள அவை நல்ல பலனை அளிக்கும்.
தலை சுற்றல் குணமாக சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் எடுத்து பொடியாக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.