புளியங் கொழுந்து

அன்றாடம் சமையலில் புளி இல்லாத உணவே கிடையாது என்று சொல்லலாம். ஒவ்வொரு உணவுகளில் சேர்க்கப்படும் நமது மிக முக்கியமான சமையல் பொருள் புளி என்றால் அது மிகையாகது. அதிலும் தமிழகத்தில் புளியின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. அளவோடு புளியை சமையலில் அன்றாடம் பயன்படுத்த சிறந்த ஆரோக்கியத்தை பெறலாம். அதுவே அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் போல் புளியும் உடல் நலத்திற்கு பதிப்பைத் தரும்.

புளி என்றதும் புளியமரம் நமக்கு நினைவிற்கு வரும். அதிலும் புளிய மரத்தின் பழங்கள் புளியம்பழம் ஒன்றுதான்புளிய மரத்தில் கிடைக்கும் பயனுள்ள பொருள் என்று எண்ணுகிறோம். ஆனால் புளிய மரத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மற்றொரு பொருளாக புளியங் கொழுந்து உள்ளன என்பது பலருக்கும் தெரியாது.

இது மட்டுமல்ல புளியங் கொழுந்தை பக்குவபடுத்தி உணவுக்கு துணைப் பொருளாகவும் சாப்பிடலாம் என்பதும் பலர் அறியாத விஷயம். ஆம், வெளிர் சிகப்பு பச்சை என இருக்கும் இளம் கொழுந்து இலைகளை சேகரித்து அவற்றை காயவைத்து பொடியாக தயாரித்து வைத்துக் கொண்டு சமையலிலும் சேர்க்கலாம். சுவையாக இருக்கும்.

புளியங் கொழுந்து கூட்டு

புளியங் கொழுந்தை முதலில் தேவையான அளவு சேகரித்து கொள்ள வேண்டும். அதனுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

துவையல்

இந்த புளியங் கொழுந்தை பயன்படுத்தி உளுத்தம் பருப்பு, மிளகாய், உப்பு சேர்த்து துவையல் செய்தும் சாப்பிடலாம். நல்ல ஒரு சுவையாக இருக்கும். இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிக்கு நல்ல சுவையாக இருக்கும்.

புளியங் கொழுந்து மருத்துவம்

எளிதாக கிடைக்கும் புளியங் கொழுந்தை பச்சையாக சாப்பிட்டாலும் நல்ல சுவையாக இருக்கும்.

புளியங் கொழுந்தைப் பச்சையாக சாப்பிட்டால் கண் தொடர்பான பிணிகள் அகலும். பாண்டு ரோகத்தைக்குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

ஜீரணத்தை அதிகரிக்கும் தன்மை கொண்ட இந்த புளியங் கொழுந்து சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது. காய்ச்சல், வயிற்றுப் பூச்சிகளுக்கும் புளியங் கொழுந்து பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் கிராமப்புறங்களில் இன்றும் புளியன் கொழுந்தை கொண்டு பச்சடி போன்ற பல உணவுகளையும் தயாரிக்கும் பழக்கம் உள்ளது. புளியங் கொழுந்திற்கு உள்-வெளி ரணங்களை ஆற்றும் இயல்பும் உண்டு.

(6 votes)