- அசை போட்டுத் தின்னுவது மாடு, அசையாமல் விழுங்குவது வீடு.
- உறவு முறையான் வீட்டில் உண்ட வரைக்கும் மிச்சம்.
- ஒப்புக்கு மாங்கொட்டை ஊருக்குச் சப்பாணி.
- கணக்கு அறிவான். காலம் அறிவாள்.
- கழுத்து வெளுத்தாலும் காக்கை கருடன் ஆகுமா?
- கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்.
- குட்டி யானையும் குளத்தைக் கலக்கும்.
- சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை அகப் படாது.
- சேரச் சேரப் பண ஆசை, பெறப் பெற பிள்ளை ஆசை.
- தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை.
- நாய் போல் உழைத்தாலும் வாய்சோறு இல்லை.
- பாகற்காய் என்றால் பத்தியம் முறிஞ்சு போச்சா.
- வாய் பார்த்தவன் வீட்டில் நாய் காக்கும்.
- வெறும் காதுக்கு ஓலைக்காது மேல்.
- அசலுக்கே மோசம், வட்டி ஏது.
- பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.
- நாற்றக் கூழுக்கு அழுகல் மாங்காய்.
- தான் கொடுத்தது பாதி. தம்பிரான் கொடுத்தது பாதி.
- சோளக் கொல்லையில் மாடு மேய்ந்தால் சொக்கனுக்கு என்ன?
- சளி பிடித்ததோ சனி பிடித்ததோ.
- குருட்டுப் பெண்ணுக்கு வரட்டு ஜம்பம்.
- குப்பையில்லா வேளாண்மை சப்பை.
- கண்ணும் புண்ணும் உண்ணத் தீரும்.
- ஏர் நடந்தால் பேர் நடக்கும்.
- எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும்.
- ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்?
- உறவும் பாசமும் உதட்டோடே.
- உதடு வெல்லம் உள்ளம் கள்ளம்.
- அம்மான் மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்.
- அயலார் வாழ்நதால் அடி வயிற்றில் நெருப்பு.
- ஆனை நீட்டிப் பிடிக்கும். பூனை தாவிப்பிடிக்கும்.
- எரு செய்வதை இனத்தான் செய்யமாட்டான்.
- கரும்பு வைப்பது காணி நிலத்தில்.
- கொழுக்கட்டை தின்ற நாய்க்கு குருதட்சிணை வேறா?
- தலை எழுத்துக்கு தாய் என்ன செய்வாள்?
- நாய் குரைத்து நந்தவனம் பாழாகாது.
- பட்டி நாய் தொட்டி சேராது.
- தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வார்.
- புலி கடிக்கும் முன்னே கிலி அடிக்கும்.
- வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
Related