tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 8

  • கொசுவுக்குப் பயந்து கோட்டையை விட்டு ஓடியது போல.
  • சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவானேன்.
  • தட்டிக் கொடுத்தால் தம்பி தலை விரித்து ஆடுவான்.
  • துப்புக் கெட்டவனுக்கு இரட்டைப் பரிசமா?
  • துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
tamil proverbs palamozhi
  • நாக்குப் புரண்டாலும் வாக்குப் புரளாது.
  • பத்து பேருக்கு பலியிட்டு ஒருவனுக்கு தலைச்சுமை.
  • பொந்தில் சுகப்பட்ட மந்தியைப் போல.
  • வாழ்வாருக்கு சீதேவி வாயிலே.
  • பள்ளம் உள்ள இடத்தில் தண்ணீர் தங்கும்.
  • நாராயணன் கோயிலுக்கு நாலு வாசல்.

  • நடுத்தெருவில் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?
  • தாலியறுத்த வீட்டிலே ஆளுக்கு ஆள் அதிகாரம்.
  • சாப்பிள்ளை பெற்றவளுக்கு சந்தோஷம் வருமா?
  • கோவில் பூனை தேவர்க்கு அஞ்சாது.
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்.
  • குத்திக் கெட்டது பல். குடைந்து கெட்டது காது.
  • கீரைத் தண்டு பிடுங்க ஏலோலப் பாட்டா?

  • கபடச் சொல்லைவிட கடிய சொல்லே மேல்.
  • வாக்கும் மனசும் ஏத்து வார்த்தை சொல்ல வேண்டும்.
  • கட்டி அழுகிற போது கையும் துழாவுமாம்.
  • எழுத்தறியாதவன் ஏட்டை சுமந்தது போல.
  • உளறிக் கொட்டி கிளறி மூடாதே.

  • உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு.
  • ஆற்று மண்ணுக்கு மாற்று மண் உரம்.
  • ஆவது அஞ்சிலே தெரியும், காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
  • அவசரச் சுருக்கே அரிவாள் மனைக்கடுக்கே.
  • அரைப்படி அரிசியிலே அன்னதானம், அதிலே கொஞ்சம் மேளதாளம்.
  • அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்.