tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 7

  • பொட்டைக் கண்ணுக்கு இரட்டைத் தீவட்டி.
  • மழைக்கும் இடிக்கும் படல் கட்ட முடியுமா?
  • அள்ளிக் கொடுத்தால் அம்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • உள்ளே வயிறு எறிய, உதடு பழம் சொரிய.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
tamil proverbs palamozhi
  • சிற்றெறும்புக்கு கொட்டாங்குச்சி நீர் சமுத்திரம்.
  • சினத்தால் கறுத்த மூக்கு சிரித்தால் வருமா?
  • கடல் பெருகினால் கரையும் பெருகுமா?
  • கொண்டைக்குப் பூச்சூடி சண்டைக்கு நிற்கிறது.
  • உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம்.
  • அச்சுக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான்.

  • குறுணி போட்டால் பதக்கு வருமா?
  • அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது.
  • அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிகாரம் வேண்டும்.
  • ஆகாசத்தில் எறிந்தால் அங்கேயே நிற்குமா?
  • ஆடு கட்ட இடம் இல்லை ஆனை வாங்கப் போனாளாம்.
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

  • கதிரைப் பார்க்கிறதா? குதிரையைப் பார்க்கிறதா?
  • கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
  • கழுதைக் காமம் கத்தினால் தீரும்.
  • கறிக்கு இல்லாத வாழைக்காய் கட்டித் தொங்குகிற தாம்.
  • காசிக்குப் போயும் முடத்தவசி காலில் விழுகிறதா?
  • குருட்டுக் கோழி தவிட்டுக்கு ஏங்கினது போல.
  • கூழ் குடிக்காத பொட்டை, கேழ்வரகு ஏண்டா நட்டாய்?

  • கெண்டையைப்போட்டு விராலை இழுக்கிறதுபோல.
  • கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச்சுவர் என்ன பிரமாதம்?
  • இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம்.
  • இறைத்த கிணறு ஊறும். இறையாத கிணறு நாறும்.
  • உள் வீட்டுக் கடனும் உள்ளங்கை சிரங்கும் கெட்டவை.
  • ஐயா சாமிக்கு கல்யாணம் அவரவர் வீட்டிலே  சாப்பாடு.
  • குட்டி ஆடு செத்தது எனக் கோளாய் குந்தி அழுதாளாம்.