tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 6

  • ஏற்றக்கோலுக்கு பிடித்தால் அரிவாள் பிடிக்குவரும்.
  • ஒட்டுத் திண்ணையில் மட்டுப் பாய் போட்டவன்.
  • கட்டி இடமானாலும் வெட்டி அரசாளலாம்.
  • காணியில் இல்லாததா கோடியில் வரப்போகிறது?
  • கூறுகெட்ட மாட்டுக்கு ஆறு கட்டுப் புல்லா?
tamil proverbs palamozhi
  • சொன்னபடி கேட்டால் சுட்டவுடன் தருவான்.
  • படுக்கப் படுக்கப் பாயும் பகை.
  • குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறும்.
  • சங்கோஜம் இல்லையென்றால் சங்கையும் இல்லை.
  • குருட்டுக் கண்ணுக்கு குவணிமை எதற்கு?
  • குணம் கெட்ட மாப்பிள்ளைக்கு மணம் கெட்ட பணியாரம்.

  • கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்.
  • காற்றுக்கு எதிரே ஏற்றிய விளக்கு போல்.
  • கட்டிலைத் திருப்பிப் போட்டால் தலைவலி போகுமா?
  • எலும்பு கடிக்கிற நாய் இடும்பைக் கடிக்குமா?
  • எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.
  • எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும்.
  • பிறர் குற்றம் அறியப் பிடரியிலே கண்.

  • எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.
  • கள்ளப் பிள்ளையிலும் செல்லப் பிள்ளை உண்டா?
  • குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்து செத்தானாம்.
  • செலவு உண்டானால் சேவகம் உண்டு.
  • தவிடு தின்பவன் கழுதை விரும்புவானா?
  • தாறு புறப்பட்டு தாய் வாழையைக் கெடுத்தது போல.

  • திரித்த வரையில் கயிறு. திரியாத வரையில் படுதை.
  • தெளோ மனசுக்கு இருளே இல்லை.
  • தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
  • பறக்கிற குருவி சிறகிலே இறை கொண்டு போகுமா?
  • புகை நுழையாத இடத்தில் புகுந்துவரும் தரித்திரம்.