tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 5

  • காட்ட முடியும். ஊட்ட முடியுமா?
  • சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?
  • நல்லவர் கெட்டால் நாயும் சீந்தாது.
  • பண்ணிய பாவத்தை பட்டுத்தொலைக்க வேண்டும்.
  • பதக்கு குடித்தால் உழக்கு தங்காதா?
  • பாட்டுப் பாடிக் குத்தினாலும பதரில் அரிசி வருமா?
tamil proverbs palamozhi
  • பொய் கிடந்து புலம்பும். மெய் கிடந்து தவிக்கும்.
  • வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?
  • வேகப் பொறுத்தது ஆறப் பொறுக்க வில்லையா?
  • வேரில் விட்டால் கிளையில் தளிர்க்கும்.
  • வேலியே வயலை அழித்தால் விளைகிறது எங்கே?
  • மதம் பிடித்த யானை மாவுத்தனை அறியுமா?

  • பாக்கை மடியில் கட்டலாம். தோப்பைக் கட்ட முடியுமா?
  • காலம் கெட்டு கைப் பிச்சை எடுத்தாற்போல்.
  • இரட்டைத் தோணியில் கால் வைத்தாற்போல்.
  • அளக்கிற நாழி அளவு அறியுமா?
  • களை எடாப் பயிர் கால் பயிர்.
  • கூப்பாடு போட்டால் சாப்பாடு வருமா?
  • சலுகையுள்ள மாடு படுகையெல்லாம் மேய்ந்ததாம்.
  • தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்.
  • தேர் ஓடி நிலைக்குத்தான் வர வேண்டும்.
  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • முதல் இல்லாத பிள்ளை வட்டிக்கு சீராடினான்.

  • இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும்.
  • ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான்.
  • மல்லாந்து துப்பினால் மார் மேல் விழும்?
  • நீர் இருக்க மோருக்கு என்ன குறை?
  • பெற்றவர்க்குத் தெரியாதா பேர் இட?
  • ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்குமாம்.
  • தன் வீட்டு விளக்கு என்று முத்தம் இடலாமா?

  • துப்புக்கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு.
  • பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறாள்.
  • மாடு கிழம் ஆனாலும் பாலின் சுவை போகுமா?
  • விட்ட இடம் பட்டணம். விடுத்த இடம் சுடுகாடு.
  • ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் பின்னோடே.
  • முள் மரத்தை முளையிலே கிள்ள வேண்டும்.