tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 4

  • கொத்துதடி கோழி, வித்தையடி மாமி.
  • சந்தையில் அடித்ததற்கு சாட்சி ஏன்?
  • ஒட்டகத்துக்கு தொட்ட இடம் எல்லாம் கோணல்.
  • அக்காள் ஆனாலும் சக்களத்தி, சக்களத்திதான்.
  • அஞ்சினவனுக்கு ஆனை. அஞ்சாதவனுக்கு பூனை.
tamil proverbs palamozhi
  • உஞ்ச விருத்திக்குப் போனாலும் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது போல்.
  • ஏர் ஆற்றுப் போனால் சீர் அற்றுப் போகும்.
  • ஒரு நாய் குரைத்தால் பத்து நாய் பதில் கொடுக்கும்.
  • சடலைத் தூர்த்தாலும் சாரியம் முடியாது.
  • கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்.

  • கால் இல்லா முடவன் கடலைத் தாண்டுவானா?
  • குடியில்லா ஊரிலே அடியிடல் ஆகாது.
  • கொள்ளி வைத்த இடத்தில் அள்ளி எடுக்கிறதா?
  • கோவில் விளங்கக் குடி விளங்கும்.
  • சங்கிலே வார்த்தால் தீர்த்தம். செம்பிலே வார்த் தால் தண்ணீர்.
  • சிந்தாது இருந்தால் மங்காது இருக்கலாம்.

  • தான் இருக்கிற அழகுக்கு தடவிக் கொண்டாளாம் வேப்பெண்ணெயை.
  • திகைப்பூண்டு மிதித்து திக்கு கெட்டாற்போல்.
  • உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.
  • ஒன்றுக்கு இரண்டு, உபத்திரவத்துக்கு மூன்று.
  • கிள்ளுகிறவனிடத்தில் இருந்தாலும் அள்ளுகிறவனிடத்தில் இருக்கக் கூடாது.
  • குள்ள நரி தின்ற கோழி கூவப் போகிறதா?

  • கோட்டையில் பிறந்தாலும் போட்ட எழுத்து போகாது.
  • செருப்பால் அடித்து பருப்பு சோறு போட்டதுபோல.
  • படுவது பட்டும் பட்டத்துக்கு இனிக வேண்டும்.
  • இடுப்பிலே காசு இருந்தால் கசப்பிலே வார்த்தை வரும்.
  • எல்லை கடந்தால் தொல்லை.
  • எறும்புக்கு தெரியாத கரும்பா?