tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 3

  • கடந்து போனது கரணம் போட்டாலும் வராது.
  • ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சிவன் இல்லை.
  • ஒரு பக்கம் பெய்தால் ஒரு பக்கம் காயும்.
  • அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது.
  • இறந்து உண்டவன் இருந்து உண்ணான்.
tamil proverbs palamozhi
  • எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது.
  • கஞ்சிக்கு காணம் கொண்டாட்டம்.
  • சாண் குருவிக்கு முழம் வாலாம்.
  • திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமா?
  • நாய் குப்பை மேட்டிலே, பேய் புளிய மரத்திலே.
  • மூடன் உறவிலும் விவேகி பகை நல்லது.

  • வாதம் ஊதி அறி, வேதம் ஓதி அறி.
  • பட்டம் கட்டின குதிரைக்கு லட்சணம் பார்ப்ட துண்டா?
  • நெய் வார்த்து உண்டது நெஞ்சு அறியாதா?
  • நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
  • செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?
  • கோமாளி இல்லாத கூத்து சிறக்குமா?
  • கொட்டும் பறை தட்டம் அறியாது.
  • உப்புக்கும் உதவாதவன், ஊருக்கு உதவமாட்டான்.
  • ஆல் பழுத்தால் அங்கே கிளி. அரசு பழுத்தால் இங்கே கிளி.
  • ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.
  • ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடு.

தமிழ் பழமொழி – 2

  • காணாதவன் கண்டால், கண்டதெல்லாம் கைலாசம்.
  • கூடும் காலம் வந்தால் தேடும் பொருள் மடியிலே.
  • தீயில் இட்ட நெய் திரும்பி வருமா?
  • கழுதைக்குப் பிரதேசம் குட்டிச்சுவர்.
  • காடு அறிந்தால் நாடு அறியும்.