- கல்வியே நாட்டின் முதன் அரண்.
- ஐயமே அறிவின் திறவுகோல்.
- அறிவே ஆற்றல்.
- அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது.
- அனுபவமில்லாத அறிவு அரை கலைஞனை உருவாக்கும்.
- அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.
- நம்மை அறிவதே நமக்கு அறிவாகும்.
- அறிவைப் பெருக்குபவன் துயரத்தை பெருக்குவான்.
- மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கு வேற்றுமை இல்லை.
- அறிவு ஒரு சுமை அன்று.
- அறிவு தன் விலை அறியும்.
- அறிவே நன் மனிதனை தொடங்கி வைக்கிறது, ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது.
- ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே விஞ்ஞானம்.
- அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு.
- கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும்.
- விடாமுயற்சி வெற்றியை தேடித் தரும்.
- மிகச் சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும்.
- வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை?
- ஒரு வித்தகனுக்கு பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.
- திறமைப்படி பெறு, தேவைப்படி கொடு.
- உயர்வாக கருதினால் உயர்ந்திட முடியும், திறமைசாலி என நினைத்தால் திறமைசாலி ஆகலாம்.
- வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
- கண்ணில் படாதது மனதிலும் படாது.
- இல்லாததற்கு ஏங்கிடும் இதயம்.
- கண்ணுக்கு எட்டாவிட்டால் இதயத்திற்கும் எட்டாது.
- வராது இருப்போர் வழிமுறை பேணார்.
- அரிதாக பார்ப்பவை விரைவாக மறந்து போகும்.
- நெருப்புக்கு காற்று போல, காதலுக்கு பிரிவு.
- பூனை புறம்போனால் எலி கூத்தாடும்.
- மேல் விழுந்து பூசிக்கொண்டால் மேவாது நட்பு.
- முனைப்பான விளைவுகளே விபத்துக்கள் ஆகும்.
- குறுகிய அறிமுகம் வருந்த வைக்கும்.
- அறிமுகம் உடையோர் பலராயினும் உற்ற நண்பர்கள் ஒரு சிலரே வேண்டும்.
- புதிய அறிமுகங்கள் புகாத வாழ்க்கை விரைவில் தனிமைப்படும்.
- வாய்ச் சொல்லை விட, செயலின் குரலே உரக்க ஒலிக்கும்.
- துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவது மேல்.
- உழைக்க கற்ற பின் பொறுக்க கற்றுக்கொள்.
- உலகமே மூழ்கினாலும் நல்லதை சரியாக செய்.
- ஆழ்ந்து ஆராய்தல் பலர் பணியாயினும் செய்து முடித்தல் ஒருவன் பணியே.
- செயல்படாதிருத்தல் செம்மையுற முடியாது.
- நோக்கங்களே செயல்களின் உரைக்கல்.
- ஒவ்வொரு விழுமிய செயலும் பழுதின்றி நிற்கும்.
- வெற்றிச் செயலே விளைபயன் ஆகும்.
- துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்.
- துயரங்கள் பகைவரையும் ஒன்றுபடுத்தும்.
- துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடினும் அறிவாளியாக்கும்.
- கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது.
- நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது.
- அறிவுரை நல்லதானால் யாரானாலும் கொள்.
- உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே.
- அளவுக்கு மீறி அறிவுரை கேட்டால் அதிகக் குழப்பம் அடைந்திட வேண்டும்.
- அறிவுரை போல இலவசம் வேறேது?
- அறிவுரை கொடுப்பதினும் கேட்பதே நல்லது.
- நல்ல அறிவுரை கொடுப்பது எளிது அதன்படி நடப்பது அரிது.
Related