- அணில் தாவாத ஆயிரம் தென்னை மரங்களை உடையோன் ஐந்து மன்னனுக்கு நிகரானவன் ஆவான்.
- நிலத்துக்கு தகுந்த கனி விளையும், குலத்துக்கு தகுந்த குணம் விளையும்.
- ஆனி அடைசாரல், ஆவணி முச்சாரல்.
- ஐப்பசி அடைமழை,கார்த்திகை கன மழை.
- ஆவணி தலை வெள்ளமும், ஐப்பசி கடைவெள்ளமும் என்றுமே கெடுதிதான்.
- தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
- நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்திலேதான் மடிய வேண்டும்.
- பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
- ஓாிதழ்தாமரை உண்ணப் பலனுண்டாம்.
- அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக.
- பொன்னாங்கண்ணி மேனியைப் பொன்னாக்கும்.
- மாதா ஊட்டாததை மா ஊட்டிவிடும்.
- மூலிகை அரைத்தால் மூன்று உலகையும் ஆளலாம்.
- வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்.
- விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?
- தவளை கத்தினால் தானே மழை.
- அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம்.
- தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை, தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை.
- தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
- புத்து கண்டு கிணறு வெட்டு.
- வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்.
- காணி தேடினும் கரிசல்மண் தேடு.
- நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்.
- விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
- களரை நம்பிக் கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
- உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழவழ.
- கோரையைக் கொல்ல கொள்ளுப்பயிர் விதை.
- சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும்.
- ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட
- நடவும் பெரியோர் வைத்த தனம்.
- பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
- கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும், அடர விதைத்தால் போர் உயரும்.
- கற்பதற்கு வயது இல்லை.
- கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.
- தீய பண்பைத் திருத்திடும் கல்வி, நல்ல பண்பை பொலிவுறச் செய்யும்.
- கற்காதவன் அறியாதவன்.
- கல்வியால் பரவும் நாகரிகம்.
- கல் மனம் போல் பொல்லாப்பில்லை, கற்ற மனம் போல் நற்பேறில்லை.
Related