- நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடை நிலம் எருக்கு!
- நீரும் நிலமும் இருந்தாலும்,பருவம் பார்த்து பயிர் செய்!
- ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்!
- பாரில் போட்டாலும், பட்டத்தில் போடு!
- மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை!
- உழவில்லாத நிலமும், மிளகில்லாத கறியும் வழ வழ!
- தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்!
- ஆற்று வண்டல் தேற்றும் பயிரை!
- நிலத்தில் எடுத்த பூண்டு, நிலத்தில் மடிய வேண்டும்!
- கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
- கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு!
- காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்!
- கூளம் பரப்பி கோமியம் சேர்!
- கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை!
- சொத்தைப் போல்,விதையைப் பேண வேண்டும்!
- முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்.
- விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
- உண்டால் உயிருக்கு உறுதி, உழுதால் பயிருக்கு உறுதி.
- கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?
- உள்ளூர்ல உதை வாங்காத வெளியூர்ல விதை வாங்காத.
- களர் கெட பிரண்டையை புதை.
- உழுவோர் உழைத்தால்தான் உலகோர் பிழைப்பர்.
- உழவும் தரிசும் ஓரிடத்தில், ஊமையும் செவிடும் ஒரு மடத்தில்.
- மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை.
- புஞ்சைக்கு நாலு உழவு, நஞ்சைக்கு ஏழு உழவு.
- நெல்லுக்கு பாய்கிற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும் பாயும்.
- காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
- ஆடு பயிர் காட்டும், ஆவாரை கதிர் காட்டும்.
- அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அருவாள்.
- மாடு மேய்க்காமல் கெட்டது.. பயிர் பார்க்காமல் கெட்டது.
- இன்றைக்கு இலை அறுப்பவன் நாளைக்கு குலை அறுப்பான்.
- கொழுத்தவன் கொள்ளு விதை, இளைத்தவன் எள்ளு விதை.
- நண்டு ஓட நெல் நடு, நரி ஓட கரும்பு நடு, வண்டி ஓட வாழை நடு, தேர் ஓட தென்னை நடு.
- கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளர்ச்சி காணாது.
- வெள்ளியில் விதை பிடி. சனியில் கதிர் பிடி.
- தாய் முகம் காணாத பிள்ளையும், மழைமுகம் காணாத பயிரும் உருப்படாது.
- அழுதுகொண்டே இருந்தாலும் ஊழுதுகொண்டே இரு.
- பட்டா உன் பேரில், சாகுபடி என் பேரில்.
- இடிக்கின்ற வானம் பெய்யாது, குலைக்கின்ற நாய் கடிக்காது.
Related