tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 2

  • வளர்த்துவிட்ட மரத்தைத் தறித்து விட்டாற்போல்.
  • எல்லாம் கிடக்க எருமை மாட்டுக்கு என்ன?
  • உடைந்த சட்டி உலைக்கு உதவாது.
  • இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தைமடம்.
  • இட்டு ஆளாப் பெண்ணுக்கு சுட்டாலும் தெரியாது.
  • சந்தம் இல்லாக் கவிக்கு அந்தம் இல்லை.
tamil proverbs palamozhi
  • செல்லரித்த காதுக்கு வெள்ளைக்கம்மல் ஏன்?
  • செருப்பு கடித்தால் திருப்பிக் கடிப்பதா?
  • தேடத் தசை இருந்தும் அனுபவிக்க அதிர்ஷ்டம் இல்லை.
  • நாயகன் பட்சம் ஆயிரம் லட்சம்.
  • பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும்.
  • மழைக்கு தண்ணீர் மொண்டு வார்ப்பவர் யார்?

  • சுவரோடாவது சொல்லி ஆறு.
  • கையால் பிடிக்கப் பொய்யாய் போச்சுது.
  • தெய்வத்துக்கு சத்தியம். மருந்துக்கு பத்தியம்.
  • மர நிழலில் மரம் வளராது.
  • வீரம் கெட்டவன் சேரன் ஆவானா?
  • பிடித்தால் பானை, விட்டால் ஓடு.

  • தனத்தால் சினம் ஆகும். பணத்தால் ஜனம் ஆகும்.
  • தங்கத்தை விற்று தவிடு வாங்கினது போல.
  • சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்.
  • சிறு மீன் எல்லாம் பெருமீனுக்கு இரை.
  • சர்க்கரை தொண்டை மட்டும், சவ்வாது கண்ட மட்டும்.

  • தோட்டப்பாய் முடைகிறவனுக்கு தூங்கப் பாய் இல்லை.
  • பாலுக்கு வந்த பூளை மோரைக் குடிக்குமா?
  • திண்ணையில் நாம் இருக்கத் தெய்வம் படியளக்க.
  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையும் கொத்தும்.
  • காடு வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு வெட்ட பயமா?