tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 19

  • அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல்!
  • ஆடிப்பட்டம் தேடி விதை!
  • எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஒரு உழவு.
  • பருவத்தே பயிர் செய்.
  • ஆடிப்பட்டம் தேடி விதை.
  • உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்.

  • நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட.
  • வலுத்தவனுக்கு வாழை, இளைச்சவனுக்கு எள்ளு.
  • எருப்போட்டவன் காடுதான் விளையும், குண்டி காய்ஞ்சவன் காடு விளையாது.
  • ஆட்டுப் புழுக்கை அன்றைக்கே, மாட்டுச் சாணம் மக்குனாத்தான்.
  • முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும், பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்.
  • ஒடிச்சு வளர்க்காத முருங்கையும், அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது.
  • அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணு,பீர்க்கங்கொடியும் பையனும் ஒண்ணு.
  • காட்டு வேளாண்மையையும் வயிற்றுப் பிள்ளையையும் எப்படி மறைக்கிறது?
  • இஞ்சி இலாபம் மஞ்சளிலே.
  • சிறு பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது.

  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கால் தடியுங்கூட மிஞ்சாது.
  • கூளை குடியைக் கெடுக்கும் குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்.
  • சிரைத் தேடின் ஏரைத் தேடு.
  • களை பிடுங்காத பயிர் கால் பயிர்.
  • அடர விதைத்துச் சிதறப் பிடுங்கு.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

  • இட்டதெல்லாம் பயிரா, பெற்றதெல்லாம் பிள்ளையா?
  • புத்து கண்டு கிணறு வெட்டு!
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!
  • களர் கெட பிரண்டையைப் புதை!
  • மாசிப் பனி மச்சையும் துளைக்கும்!
  • வெள்ளமே ஆனாலும்,பள்ளத்தே பயிர் செய்!
  • காணி தேடினும் கரிசல் மண் தேடு!
  • கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி!