tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 18

  • சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  • தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
  • சிறு துளி பெருவெள்ளம்.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  • ஆடத்தெரியாதவர், தெருக் கோணல் என்றாராம்.
  • மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • நுணலும் தன் வாயால் கெடும்.
  • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  • சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

  • கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  • மனம் போல வாழ்வு.
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.

  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
  • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்கள்.
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  • வானம் சுரக்க, தானம் சிறக்கும்.
  • நாய் வாலை நிமிர்த்த முடியாது.
  • மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
  • எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  • பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • தாழ்ந்து நின்றால், வாழ்ந்து நிற்பாய்.

  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்.
  • தவளை தன் வாயாற் கெடும்.
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  • இக்கரைக்கு அக்கரை பச்சை.
  • புயலுக்குப் பின்னே அமைதி.
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
  • கெடுவான் கேடு நினைப்பான்.

  • நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
  • தவளை கத்தினால் தானே மழை!
  • அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்!
  • எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்!
  • மார்கழி மழை மண்ணுக்கு உதவாது!
  • தை மழை நெய் மழை!