- கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
- உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒரு கட்டு விறகில் வேகிறது மேல்.
- வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்.
- ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
- நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
- அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
- கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தட்சிணையா?
- பருவத்தே பயிர்செய்.
- காலம் பொன் போன்றது.
- தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.
- விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
- ஊரோடு ஒத்து வாழ்.
- சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
- கொடுக்குறதோ உழக்குப்பால், உதைக்கிறதோ பல்லுப்போக.
- இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
- கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
- ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
- புல் தடுக்கிப் பயில்வான் போல.
- அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.
- ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
- கோத்திரம் அறிந்து பெண் கொடு, பாத்திரம் அறிந்து பிச்சை எடு.
- ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.
- போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை, வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.
- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
- உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான.
- மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.
- ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
- யானைக்கும் கூட அடி சறுக்கும்.
- பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
- வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
- அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
- பேராசை பெரு நஷ்டம்.
- அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
- அலைகடலுக்கு அணை போட முடியுமா?
Related