- அழையாத வீட்டு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது.
- அத்தனையும் சேர்த்து உப்பிட மறந்தது போல.
- அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே.
- அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
- கழுதைப் புண்ணுக்கு தெருப்புழுதி மருந்து.
- கேட்பார் சொல்லைக் கேட்டு கெடாதே.
- சுண்டைக்காயனும் மண்டைக்காரனும் சண்டை போட்டால் சண்டைக்காரனுக்கு என்ன?
- செருப்பால் அடித்தாலும் திருட்டுக் கை நில்லாது.
- சிடுக்குத் தலையும் சொடுக்குப் பேனும்.
- தூண்டில் போட்டு ஆளை பிடிக்கும் புத்திசாலி.
- பண்டாரம் கூழுக்கு மூன்றானையா?
- பாடப் பாட ராகம், படுக்கப் படுக்க வேகம்.
- பேர் பொன்னம்மாள், கழுத்தில் கருகு மணி.
- மாலைக் கண்ணுக்கு முலைச் சுவர்.
- வாய்க் கொழுப்பு சீலையிலே வடிந்தாற் போல.
- மதுரையில் மூட்டைத் தூக்க செங்கற்பட்டில சும்மாடா?
- பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போவான்.
- கொண்டிக் குப்பன் சண்டைக்குப் போனான்.
- கடை அரிசி கஞ்சிக்கு உதவுமா?
- சகத்தைக் கெடுத்து சுகத்தை வாங்குவதா.
- நல்ல காரியத்துக்கு நானூறு இடைஞ்சல்.
- நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு வராது.
- நெல்லுக் குத்துகிறவளுக்கு கல்லுப் பரீட்சை தெரியுமா?
- பிச்சைச் சோற்றிலும் எச்சில் சோறா?
- நாணினால் கோணும், நடந்தால் இடறும்
- தேடி அழைத்த விருந்துக்கு வாடி இருந்தது போல.
- சோற்றுப் பானை உடைந்தால் மாற்றுப் பானை இல்லை.
- சங்கரா, சங்கரா என்றால் சாதம் வாயில் விழுமா?
- எலும்பு கடிக்கிற நாய் இரும்பு கடிக்குமா?
- எறுப்பு ஆனை ஆகுமா, துரும்பு தூண் ஆகுமா?
- ஒரு பூனை மயிர் ஓடித்தால் ஒன்பது பிராணனை கொள்ற பாவம்.
- ஒன்றுக்கும் ஆகாதவன் உபாத்யாயன் ஆகட்டும்.
- கடும் காற்று மழை காட்டும், கடு நட்புப் பலக காட்டும்.
- சகுனம் சொன்ன பல்லி கழுநீர்ப் பானையில் விழும்.
- கொடுக்கிற கைக்கு என்றும் குறைவு இருக்காது.
- கெண்டை பட்டாலும் பட்டது, கிடாரம் பட்டாலும் பட்டது.
- குளித்தால் குளிர் போகும் நசித்தால் நாணம் போகும்.
- கற்பகத்தைச் சார்ந்தும் காஞ்சிரங்காய் கேட்கலாமா?
- ஈயாத புல்லர் இருந்தென்ன, போய் என்ன?
- உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல் காணாது.
- ஆட்டம் போட்ட வீட்டுக்கு விட்டம் ஒரு கேடா?
- கால் நடைக்கு இரண்டு காசு. கை வீச்சுக்கு ஐந்து காசு.
- கொண்டவன் நாயே என்றால் கண்டவனும் கழுதை என்பான்.
- தாராளக்கையே தலை மேல் சற்று வையேன்.
- பாசி மணிக்காரி ஊசி விற்றது போல.
- வயிற்றுப் பிள்ளையை நம்பிக் கைப்பிள்ளையைக் கை விட்டது போல.
- வெட்டப் பலம் இல்லை, விட்டுப் போக மனம் இல்லை.
- மனம் இருந்தால் மாரியம்மா, இல்லாவிட்டால் காளியம்மா.
- நுரையைத் தின்றால் பசி போகாது.
- தடுக்கி விழுந்தால் பிடிக்கும் பாதி.
- செருப்புக்கு தகுந்தாற் போல் காலை வெட்டுவதா?
- சுண்டெலி சிலம்பம் பிடித்து ஆனையை ஜெயிக்க முடியுமா?
- சட்டியோடு அகப்பை தட்டாமல் போகுமா?
Related