tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 15

  • பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம், அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.
  • பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்க மாட்டான்.
  • நொந்ததை உண்டால் நோய் உண்டாகும்.
  • நாலு வீட்டில் நக்கிக் குடிக்கிற நாய்க்கு ஏன் இந்த வாய்?
  • தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி?
  • தலைக்கு வேறு தாடிக்கு வேறா?
  • கொள்ளையிடப் போகிறவனுக்கு குருடன் துணை ஆகுமா?
tamil proverbs palamozhi
  • கால் படி அரிசி இருந்தால் கஞ்சி, அரைப்படி இருந்தால் அன்னம்.
  • காட்டை வைத்துக் கொண்டல்லவோ வேட்டையாட வேண்டும்.
  • ஓடும் நாயைக் கண்டால் குரைக்கும் நாய்க்கு இளக்காரம்.
  • எலிக்குப் பயந்து சந்நியாசம் போனது போல.
  • எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பலன்.
  • ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா?
  • இருட்டுக் குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.

  • ஆனை மீது ஏறினாலும் அம்பலத்தில் இறங்கத் தான் வேண்டும்.
  • அறியா விட்டால் அசலைப்பார், தெரியாவிட்டால் தெருவைப்பார்.
  • அணை கடந்த வெள்ளம் அழைக்கத் திரும்புமா?
  • ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாய் போட்டவன்.
  • ஓந்தி வேலிக்கு இருக்கிறது, தவளை தண்ணீ ருக்கு இருக்கிறது.
  • கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
  • காளை ஈன்றதென்று கேட்குமுன்னே கயிறு எடு என்றானாம்.

  • குப்பை நாய்க்கு சொர்க்க ஞாபகம்.
  • சுகத்தைத் தள்ளனாலும் துக்கத்தைத் தள்ளலாகாது.
  • தனக்கே தாளமாம் தம்பிக்குப் பலகாரமாம்.
  • பொந்தில் அகப்பட்ட மந்தியைப் போல.
  • மக்காவுக்குப் போயா கொக்கு பிடிக்க வேண்டும்?
  • மூலையில் இருப்பவரை முற்றத்தில் வைத்தது போல்.

  • சந்திரன் இல்லாத வானமும், மந்திரி இல்லாத அரசும் பாழ்.
  • சுக்கு செத்தாலும் சுரணை போகாது.
  • புத்தி முற்றியவர்க்கு சித்தியாதது ஒன்றும் இல்லை.
  • முத்து அளந்த கையால் மோர் விற்கிறதா?
  • பட்டணத்தாள் பெற்ற குட்டி, பணம் பறிக்க வல்ல குட்டி.
  • மனசில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாயிலே.
  • வலிமைக்கு வழக்கு இல்லை.
  • தினை அறுக்கச் சென்ற இடத்தில் பனை முளைத்தது போல.
  • சும்மா இரு என்றால் அம்மானை போலக் குதிக்கிறாயே.
  • சல்லி கட்டின மாட்டுக்கு சொல்லி கொடுக்க வேண்டுமா?
  • குரங்கை அழைத்துக் கொண்டு கூத்துப் பார்க்கப் போனானாம்.
  • காலைப் பிடி என்றால் கழுத்தைப் பிடித்தானாம்.
  • கழுதைப் பாரம் வண்ணானுக்கு என்ன தெரியும்.

  • தர்மத்தினால் வந்தது தர்மத்தினால் போக வேண்டும்.
  • ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.
  • எட்டு எள்ளுக்கு சொட்டு எண்ணெய் எடுப்பான்.
  • ஆடு பிடிக்கப் போய் ஓநாயிடம் அகப்பட்டு கொண்டது போல.