- திறந்த கதவுக்கு திறவு கோல் தேடுவானேன்.
- தேவனுக்கு ஈயைத் தேடி விட வேண்டுமா?
- நிறைந்த சால் நீர் கொள்ளுமா.
- பகடியைப் பாமபு கடித்தது போல.
- பிள்ளையாரை சாக்கிட்டு பூதம் விழுங்கிற்றாம்.
- அப்பத்துக்கு மேல் நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போகும்.
- அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது.
- கடன் பட்டாயோ கடை கெட்டாயோ?
- கூடி வருகிற காலத்தில் குடுமி நட்டமா நிற்குமாம்.
- செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் மருந்தாகுமா?
- பஞ்சு கயிறானால் பாரம் தாங்கும்.
- பரிந்து இட்ட சோறு பாம்பாய் பிடுங்குகிறது.
- பைக்குள் இருந்தால் கைக்குள் வரும்.
- மாவு இருக்கிற மணம் போல கூழ் இருக்கிற குணம்.
- முதல் இல்லாதவன் உயிர் இல்லாதவன்.
- பிறந்தால் தம்பி வளர்ந்தால் பங்காளி.
- சம்பளம் அரைப் பணம் ஆனாலும் சலுகை இருக்க வேண்டும்.
- சோற்றுக்கே தாளமாம், பருப்புக்கு நெய் வேண்டுமாம்.
- கடா ஆனாலும் உழக்குப் பால் கறக்காதா என்கிறான்.
- கற்றது எல்லாம் வித்தை அல்ல, பெற்றது எல்லாம் பிள்ளையல்ல.
- குட்டி நாய் வேட்டை நாயை விரட்டினாற் போல.
- குணம் கெட்ட இடத்திலே குன்றியும் இராது.
- சிறு முள் குத்தி பெரு மலை நோகுமா?
- செவிட்டுக்கு சூனியம், அசட்டுக்கு ஆங்காரம்.
- சொத்தைப் போல வித்தையைப் பேணு.
- தோணி போடும் துறை கிடக்கும்.
- பெருமை சொன்னால் கறவைக்குப் புல் ஆகுமா?
- பொய்யும் மெய்யும் போக்கிலே வெளிப்படும்.
- மலராத பூவுக்கு மணம் ஏது?
- மலையே விழுந்தால் மண்ணாங்கட்டியா தாங்கப் போகிறது?
- மழை பெய்து குளம் நிறையுமா, பனி பெய்து நிறையுமா?
- வருவது தெய்வத்தால், கெடுவது கர்வத்தால்.
- வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.
- வெளி மழை விட்டாலும் செடி மழை விடாது.
- வேட்டைக்கு ஆகாத நாய் வீரம் பேசியதைப் போல.
- மூன்று பல்லும் போனவருக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை?
- முத்திலும் சொத்தை உண்டு, பவளத்திலும் பழுது உண்டு.
- மத்து இட்ட தயிர் போலப் புத்தி குழம்புகிறது.
- மண்டைக்கேற்ற கொண்டை, வாய்க்கேற்ற பேச்சு.
- பூ விழுந்த கண்ணிலே கோலும் குத்தியது.
- பிண்டத்துக்கு இருக்காது, தண்டத்துக்கு இருக்கும்.
- பாராதே கெட்டது பயிர், ஏறாதே கெட்டது குதிரை, கேளாதே கெட்டது கடன்.
Related