tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 13

  • முட்டாளுக்குப் பட்டால் தான் தெரியும்.
  • வட்டம் சுற்றியும் வழிக்கு வரவேண்டும்.
  • வளர்ந்த உயரத்தை வாசற்படியில் காட்டுகிறதா?
  • வாழ்வதும் கெடுவதும் வாயாலே தான்.
  • வீட்டு எலியை அடித்தால் மோட்டு எலி பறக்கும்.
  • காகம் கங்கையில் முழுகினாலும் அன்னம் ஆகுமா?

  • மடக்கேள்விக்கு மாற்று உத்தரம் இல்லை.
  • மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.
  • வயிற்றை அறுத்தாலும் வாகாய் அறுக்கவேண்டும்.
  • நீண்ட புல் நிறக நிழலாகுமா ?
  • நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர், விழுந்தால் குட்டிச்சுவர்.
  • நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.
tamil proverbs palamozhi
  • நார் இல்லாமல் மாலை தொடுக்கலாமா?
  • ஆற்றுக்குள்ளே நின்று அரஹரா சிவசிவா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்கிறதாம் சொக்க லிங்கம்.
  • தெரிந்தவனுக்குத்தான் தெரியும், செம்மறியாட்டு முட்டை.
  • துறுதுறுத்த வாலு துக்காணிக்கு நாலு.
  • திருட்டு உடைமை உருட்டிக் கொண்டு போகும்.
  • திருட்டு நெல்லுக்கு மத்தளம் மரக்கால்.

  • சின்ன வீட்டுச் சேதி அம்பலத்திலே வரும்.
  • சாக்கடைப் புழுவுக்குப் போக்கிடம் எங்கே?
  • சரத்தைப் பார்த்து பரத்தைப் பார்.
  • உண்ணி கடித்த நாய் உதறுவது போல.
  • கேடு காலத்தில் ஓடு கப்பரை.
  • கெட்ட கேட்டுக்கு வட்டம் கால் பணம்.
  • குளத்தில் போட்டு விட்டு கிணற்றில் தேடினால் கிடைக்குமா?
  • காணியில் இல்லாததா கோடியில் வரப் போகிறது?

  • கன்று செத்துக் கைமேலே கறக்கலாமா?
  • கழுதை மேல் ஏறி என்ன, இறங்கி என்ன?
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கடன் வாங்கித் தின்றவன் கடைத் தேற மாட்டான்.
  • ஊணினால் உறவு, பூணினால் அழகு.
  • ஈர் பேன் ஆகி, பேன் பெருமாள் ஆனது போல.
  • அரிசியை இரைத்தால் ஆயிரம் காக்கை.

  • ஈயத்தைப் புடம் போட்டால் வெள்ளி ஆகுமா?
  • ஏறுகிற குதிரைக்கு எருதே மேல்.
  • காண்பாரைக் கண்டு கழுதையும் பரதேசம் போயிற்றாம்.
  • கைவரிசை இருந்தாலும் மெய் வரிசை வேண்டும்.
  • சுண்டைக்காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?
  • சொன்னதை விட்டு சுரையைப் பிடுங்குகிற மாதிரி.