- பழம் பழுத்தால் கொம்பில் தங்காது
- பாம்பு பசியை நினைக்கும். தேரை விதியை நினைக்கும்
- மன வீதி உண்டானால் இட வீதி உண்டு
- மாங்காய்க்குத் தேங்காய் மருந்து
- வட்டிக்கு கொடுத்த பணம் வாய்க்கரிசிக்கு உதவாது
- வயிறு நிறைந்தால் வாழ்வு விடியும்
- அழுதால் துக்கம், சொன்னால் வெட்கம்
- அவலமாய் வாழ்பவன் சுலபமாய் சாவான்
- ஆனை போனாலும் அடிச்சுவடு போகாது
- கல்லைக் கிள்ளினால் கைதான் நோகும்
- காட்டில் எரித்த நிலாவும் காலையில் பெய்த மழையும்
- கையில் இருக்க நெய்யில் கை விடுவானேன்.
- கொண்டவன் அடிக்க கொழுந்தன் மேல் விழுந்தாளாம்
- கொடுப்பதைத் தடுப்பவன் உடுப்பதும் இழப்பான்
- கோபுர விளக்கைக் கூடையால் மூடுவானேன்
- தொடுக்கத் தெரியாவிட்டாலும் கெடுக்கத் தெரியாதா?
- பங்கு இட்டவருக்கு பானை தாளி மிச்சம்
- படுத்தால் பசி பாயோடு போய்விடும்.
- புகை வீட்டைச் சுற்றும்
- மலையின் உயரம் மலைக்குத் தெரியுமா?
- மிஞ்சினால் மென்னி, கெஞ்சினால் கால்
- வாய்ப் பந்தல் நிழல் தருமா?
- வாயில் அடித்தாலும் வயிற்றில் அடிக்காதே
- நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போயிற்று
- இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஒட்டுகிறது போல.
- கொட்டிக் கிழங்கும் வெட்டைக்கு உதவும்.
- அள்ளித் துள்ளி அரிவாள் மனையில் விழுந்தாளாம்.
- கழுதை வாலைப் பிடித்து கரை ஏற முடியுமா?
- ஊர் எல்லாம் உறவு, ஒரு வாய் சோறு இல்லை.
- இங்கிதம் தெரியாதவனுக்கு சங்கிதம் தெரிந்து என்ன பயன்?
- பாலைப் புகட்டலாம். பாக்கியத்தைப் புகட்ட முடியுமா?
- பொக்கை வாய்க்கு ஏற்ற பொரிமா.
- அத்தை இல்லா வீடு சொத்தை.
- அம்மி மிடுக்கோ அரைப்பவர் மிடுக்கோ.
- ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
- உழக்கு உற்றாருக்கு, பதக்கு பரதேசிக்கு.
- எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறதா?
- காட்டுக் கட்டைக்கு ஏற்ற முரட்டுக் கோடாலி.
- கொத்தடிமைக்குக் குடியடிமையா?
- சினந்தாலும் சீர் அழியப் பேசாதே.
- செவிடனும் குருடனும் கூத்து பார்த்தாற்போல.
- திருவிழாப் பார்க்க வந்தவன் கழுத்தில் தவிலைக் கட்டி அடித்தது போல.
- பட்ட இடம் பொழுது, விட்ட இடம் விடுதி.
- பூணத் தெரிந்தால் போதுமா, பேணத் தெரிய வேண்டாமா?
- மரத்தடியில் விழுந்த விதை முளைக்காது.
Related