tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 11

  • வைதால் வட்டி போச்சு, அடித்தால் அசல் போச்சு.
  • மனம் காவலா, மதில் காவலா?
  • பனி பெய்தால் மழை இல்லை. பழம் இருந்தால் பூ இல்லை.
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • நாடிக் கொடுப்பாரைக் கூடிக் கெடுக்கிறதா?

  • நல்லது போனால் தெரியும், கெட்டது வந்தால் தெரியும்.
  • ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தால்.
  • ஆடி ஓய்ந்தால் அங்காடிக்கு வர வேண்டும்.
  • அண்டத்தை, சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா?
  • அணில் ஏறித் தென்னை அசையுமா?
  •  ஆசை உள்ள மட்டும் அலைச்சலும் உண்டு.
  • ஈடு உள்ள குடிக்கு கேடு இல்லை.
tamil proverbs palamozhi

  • உள்ளங்கையில் போட்டு புறங்கையை நக்கலாமா?
  • ஊர்க் கடனும் உள்ளங்கை சிரங்கும் போல.
  • ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலுமே சந்தேகம் இல்லை.
  • ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?
  • கடல் பெருகினால் கரை ஏது?
  • கவலை இல்லா கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும்

  • அமாவாசை இருட்டிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி
  • ஆயிரக்கல நெல்லுக்கு ஓர் அந்து போதும்
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  • கல் விதைத்து நெல் அறுத்தவர் யார்?
  • கார்த்திகை மழை கல்லை உடைக்கும்.
  • சட்டி பாலுக்கு ஒரு சொட்டு மோர் பிரை
  • தவிடு தின்பவன் அமுதை விரும்புவானா?

  • துரும்பு தூண் ஆகுமா?
  • நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாது
  • நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா?
  • பலர் கண்பட்டால் பாம்பும் சாகும்.
  • பால் சோற்றுக்குப் பருப்பு கறியா?
  • மாமியார் செத்ததற்கு மருமகள் ஆடுவது போல
  • வாங்கின பேருக்கு வாய் ஏது, வீங்கின பேருக்கு வெட்கம் ஏது?
  • பெண்ணைப் போற்றி வளர், ஆணை அடக்கி வளர்
  • நொய் அரிசி கொதி பொறுக்காது
  • நாலு செத்தை கூடினால் ஒரு கத்தை
  • தூங்கும் புலியை வால் உருவி விட்டாற் போல