tamil proverbs palamozhi

தமிழ் பழமொழி – 10

  • உண்டால் தீருமா பசி, கண்டால் தீருமா ருசி.
  •  உழுது உலர்ந்தது பழுது ஆகாது.
  • எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்.
  • கட்டின பெண்டாட்டி பட்டி மாடு மாதிரி.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • காட்டில் செத்தாலும் வீட்டில்தான் தீட்டு.
  • அத்தைச் செல்லானம் அடைமழைக்கு அடையாளம்.
  • சுமந்தவன் தலையிலே சும்மாடு.
  • தாய்க்கு ஆகாத பிள்ளை ஊருக்கு ஆகாது.
  • திருட்டுக்கு இருட்டு ஏது?
  • நாயைக் கொஞ்சினால் மூஞ்சியை நக்கும்.
  • போட்டால் நெல். போடாவிட்டால் புல்.
  • வாதம் கெட்டால் வைத்தியம்.
tamil proverbs palamozhi
  • வெளியில் தளுக்கு உள்ளே அழுக்கு.
  • விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்?
  • நில்லாத காலடி நெடுந்தூரம் போரும்.
  • பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.
  • பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள்.
  • பாய்க்கு தக்கபடி காலை நீட்டு.

  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  • முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
  • அக்காளோடு போயிற்று அத்தான் உறவு.
  • அக்னிப் பந்தலில் வெண்ணெய் பதுமை ஆகுமா?
  • கடைப் பிறப்பு கழுதைப் பிறப்பு.
  • தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை.
  • பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.

  • வேகாத சோற்றுக்கு விருந்தாளி இரண்டு பேர்.
  • ராஜா மெச்சினவள் ரம்பை.
  • பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?
  • நிலத்துக்கு ஏற்ற நீரும் குலத்துக்கு ஏற்ற சீரும்.
  • ஆமைக்கு பத்து அடி என்றால் நாய்க்கு நாலு அடி.
  • தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்.
  • சாக்கடைக்குப் போக்கிடம் ஏது?

  • கொடி சுற்றிப் பிறந்தால் குடிக்கு ஆகாது.
  • கெடுவார்க்கு கெடுமதி பிடரியில்.
  • கடுகு சிந்தினால் கலகம் வரும்.
  • ஓரம் சொன்னவன் ஆருக்கும் ஆகான்.
  • ஏவற் பேய் கூரையைப் பிடுங்கும்.
  • எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • ஈடாகாதவளை எதிர்க்காதே.

  • இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை.
  • ஆண்டி பெற்ற அஞ்சும் அவயம்.
  • கரும்புக் கட்டுக்கு எறும்பு தானே வரும்.
  • காளிப்பட்டம் போனாலும் மூளிப்பட்டம் போகாது.
  • தை மழை தவிட்டுக்கும் ஆகாது.
  • வாங்கித் தின்னுமாம் வயிறு, விண்ணாரம் போடுமாம் உதடு.
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகாது.
  • விறகு கோணல் ஆனால் நெருப்பு பற்றாதா?
  • வேசி உறவு காசிலே.