கோடை இடித்துப் பெய்யும், மாரி மின்னிப் பெய்யும்.
கையூன்றி அள்ளவோ கரணம் போடவேண்டும்.
குத்துகிற உரல் பஞ்சம் அறியுமா?
கார் மேக மழையில் காற்றடித்தால் போச்சு.
கள்ளிக்கு ஏன் முள் வேலி?
கழுதை உழுது கம்பு விளையுமா?
கல்லுப் பிள்ளையாரைக் கடித்தால் பல் போகும்.
ஓடி வரும் பூனை ஆடி வரும் ஆனை.
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பார்.
தீரர் வழக்குக்கு தெய்வமே சாட்சி.
பசிக்கு பனம் பழமும் ருசிக்கும்.
பட்ட மரம் காற்றுக்கு அஞ்சாது.
புளிய மரத்துப் பிசாசு பிள்ளையாரையும் பிடித்ததாம்.
போர் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?
மதி இருக்க விதி இருக்கும்.
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.
தாட்சண்யம் தனநாசம்.
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை தன் பிள்ளை ஆகுமா?
சொப்பனத்தில் கண்ட பணம் செலவுக்கு ஆகுமா?
சூடு சுரணையற்றவனுக்கு நாடு நகரம் எது?
இடக்கனுக்கு வழி எங்கே? கிடைக்கிறவன் தலை மேலே.
ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம்.
எழுதிய விதி அழுதால் தீருமா?
ஊமைக்கு வாய்த்தது ஒன்பதும் பிடாரி.
உழுதவன் காட்டைப் பார், மேய்த்தவன் மாட்டைப் பார்.
இறந்தால் போச்சு மூச்சு, மறந்தால் போச்சு காசு.
ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடமில்லையா?
ஆயுசு கொட்டியானால் ஔடதம் பலிக்கும்.
அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும்.
எருக்கு இலைக்கு மருக்கொழுந்து வாசனையா?
இளைத்த நேரத்துக்குப் புளித்த மோர்.
எரியும் கொள்ளியை ஏறத் தள்ளாதே.
கண் அளக்காததைக் கை அளந்து விடுமா?
குறைவறக் கற்றவன் கோடியில் ஒருவன்.
சமுத்திரம் பொங்கினால் கிணறு கொள்ளுமா?
சாளக்கிராமம் சாமியாருக்கு சோறு போடுமா?
தன்னை அறிந்து பின்னே பேசு.
தொட்டவன் மேல் தொடு பழி.
நட்டுவண் பிள்ளைக்கு கொட்டிக்காட்ட வேண்டுமா?
பக்குவம் தெரிந்தால் பல்லக்கு ஏறலாம்.
படுக்கை சுகம் மெத்தை அறியாது.
போக்கற்றவனுக்கு போனதெல்லாம் வழி.
வக்கணைக்காரன் புழுகு வாசற்படி மட்டும்.