தமிழகத்திலிருக்கும் ஒவ்வொரு சமையலறையிலும் கட்டாயம் இடம் பிடிக்கும் ஒரு பொருள் புளி. சமையலறையில் மட்டுமல்ல பிரதானமான பல உணவுகளில் இடம்பிடிக்கும் ஒரு பொருளும் புளியே. ரசம், சாம்பார் தொடங்கி அனைவருக்கும் பிடித்த புளியோதரைக்கும் சேர்க்கும் பிரதானமான உணவுப் பொருள் புளி. ஆப்ரிக்காவை பூர்விகமாக கொண்ட இந்த புளியை சில நூறு ஆண்டுகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
தமிழக சமையலில் பருப்பு, காய் இருக்கிறதோ இல்லையோ, புளி இல்லாத சமையலை பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவுகளில் மிக பிரதானமான இடம் பிடிக்கும் சுவைகளில் ஒன்றான புளிப்பு சுவைக்கு அதிகம் சொந்தம் கொண்டாடும் பொருள் புளியம்பழம். சித்திரை தொடங்கியதும் புளியம்பழம் வரத்து சந்தைகளில் அதிகமாக இடம்பெறும்.
வருடத்திற்கும் தேவையான புளியை தமிழக மக்கள் பெரும்பாலானவர்கள் வாங்கி அதனை சுத்தப்படுத்தி, நன்கு காயவைத்து பத்திர படுத்துவார்கள். பின் மாதாமாதம் தேவைகேற்ப ஒரு சிறு அளவு எடுத்து வேறொரு ஜாடியில் வைத்து பயன்படுத்துவார்கள். சமையல், உடல் வலிக்கு மட்டுமல்லாமல் மருத்துவத்திற்காகவும் இதனை பயன்படுத்துவதுண்டு.
புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்ற கருத்தை நம் வீட்டு பெரியவர்கள் உட்பட பலர் சொல்லக் கேட்டிருப்போம். புளியை அளவோடும், பக்குவமான முறையிலும் பயன்படுத்த எந்த தீங்கும் புளியில் இல்லை. இவ்வாறு பயன்படுத்தினால் இரத்தத்தை முறிக்கக் கூடிய கொடிய சத்தும் கூட புளியில் இல்லை. அதிக புளிப்பு உணவுகளும் புளியை பக்குவப்படுத்தாமல் பயன்படுத்துவதுமே உடலுக்கு தீங்கு விளையும். எவ்வாறு புளியை பக்குவப்படுத்துவது என்றும் இந்த பதிவில் பார்க்கலாம். அதற்கு முன் மருந்தாக எவ்வாறு புளி பயன்படுகிறது என பார்க்கலாம்.
வாந்தி, குமட்டல்
குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் எந்தக் காரணத்தால் ஏற்பட்டாலும், புளியை வாயில் போட்டு சப்பி நீரை விழுங்கினால் வாந்தி உடனே நிற்கும். புளியை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.
இரத்தக்கட்டு
அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியையும் கல் உப்பையும் கலந்து குழம்பு போல் அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து சூடுபடுத்தி தாளக்கூடிய சூட்டுடன் அடிபட்ட இடத்தில் பற்று போட இரத்தக் கட்டு கரைந்து விடும்.
வீக்கம் வலி தீர
கொஞ்சம் புளி, சிறிது உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பிலேற்றி குழம்பு போல் காய்ச்சி எடுத்து பொறுக்கும் சூட்டுடன் அடிபட்ட வீக்கத்தில் மேல் கனமாக பற்று போட வீக்கம் விலகும். தினமும் காலை, மாலை என மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்தால் வீக்கம் வாடும். வலியும் தீரும்.
பல் வலி தீர
சிறிதளவு புளியை எடுத்து அதே அளவு கல் உப்பையும் எடுத்து இரண்டையும் நன்றாக பிசைந்து பற்களில் வலியுள்ள இடத்தில் அடையாக வைத்து அழுத்தினால் பல்வலி விரைவில் தீரும்.
தேள் கடிக்கு
தேள் கடிக்கு புளி சிறந்த மருந்து. சுத்தமான புளியோடு சம அளவு தூய ஈர சுண்ணாம்பைப் பிசைந்தால், சூடாக இருக்கும். இதனைத் தேன் கொட்டிய இடத்தில் வைத்து அழுத்திய சில நிமிடங்களில் சதையில் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு கலவையில் ஏறும். கடுப்பு நிற்கும்.
பல் வலி, எகிறு வீக்கம்
எகிறு வீக்கம், பல் வலி இவற்றிற்கு புளியங்கொட்டை அளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருக்க உமிழ் நீர் சுரக்கும். அந்த உமிழ் நீரைத் துப்பிவிட வேண்டும். பின் 10 நிமிடம் அடக்கிய புளியைத் துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வலி முறியும். மூன்று வேளை செய்தால் பூரண குணமாகும்.
பிற நோய்களுக்கு
உடலுக்கு அதிக வெப்பம் தர, சூலை சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும், வாத சம்பந்த நோய்களைக் கண்டிக்க புளி, புலியாகச் செயல்படும்.
புளியம்பழத்தில் உள்ள உயிர்ச்சத்துக்கள்
20 கிராம் எடை புளியம் பழத்தில்
வைட்டமின் ஏ-28 மி.கி.
வைட்டமின் பி-17 மி.கி.
வைட்டமின் சி. 1 மி.கி.
சுண்ணாம்புச்சத்து 48 மீ.கி.
வெப்ப அளவு- 82 காலரி.
புளியை எவ்வாறு உணவில் பயன்படுத்துவது? How to use Tamarind in Food?
உணவில் புளியை பயன்படுத்த வேண்டுமானால் பழைய புளியையே பயன்படுத்த வேண்டும். அதுவும் புளியை நெருப்பில் சுட்ட பின்பே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் புளியில் இருக்கும் சில உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு பொருட்கள் நீங்கும். உணவு மருந்தாக நமது உடலில் செயல்பட நமது முன்னோர்களும், சித்தர்களும் கூறியவாறு பழைய புளியை சுட்டு பயன்படுத்த வேண்டும்.
உணவாக புளியை பயன்படுத்த வேண்டுமானால் பழைய புளியையே பயன்படுத்த வேண்டும். அதுவும் புளியை நெருப்பில் சுட்ட பின்பே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் புளியில் இருக்கும் சில உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு பொருட்கள் நீங்கும். உணவு மருந்தாக நமது உடலில் செயல்பட நமது முன்னோர்களும், சித்தர்களும் கூறியவாறு பழைய புளியை சுட்டு பயன்படுத்த வேண்டும்.